திருச்சி, மே. 12- சுயமரியாதை இயக்க – குடி அரசு நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் திருச்சி மாவட் டம், திருவெறும்பூர், காவலர் குடியிருப்பு, அண்ணாநகர் மூன்றா வது பேருந்து நிறுத்தம் அருகில் மே 8 ஆம் தேதி நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருவெறும்பூர் ஒன்றிய மகளிரணி செயலாளர் ரூபியா ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், மாவட்டசெயலாளர் இரா. மோகன்தாஸ், விடுதலை வாச கர்கள் ஆணையர் கி.நாராயண சாமி, வங்கி மேலாளர் வ.வீராசாமி இரா.வீரசேகரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச் சுடர் தலைமை உரையாற்றினார். பெல் .ம.ஆறுமுகம் தொடக்க உரையாற்றி, நிகழ்ச்சியை ஒருங் கிணைத்தார்.
திராவிடர் கழக தொழிலாளர் கழக ஒருங்கிணைப்பாளர் குடந்தை குருசாமி, திராவிடர் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், கழக மாநில அமைப்பாளர் இரா.ஜெயக்குமார் உரையாற்றினார்.
தலைமைக்கழக பேச்சாளர் இராம.அன்பழகன் சுயமரியாதை இயக்க வரலாற்றையும், குடிஅரசு இதழின் வரலாற்றையும், திரா விடர் கழகம் செய்த பணியினையும், தந்தை பெரியார் வழியில் தமிழர் தலைவர் ஆசிரியர் ஆற்றிவரும் தொண்டினையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். நிறைவாக மாவட்ட மகளிரணி செயலாளர் சாந்தி நன்றி கூறினார்.
முன்னதாக தென்மொழிப்பண் ணன் குழந்தை ஈகவரசன் புரட்சிக் கவிஞர் குறித்தும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாடல்களை யும் தந்தை பெரியார் பாடல்களை யும் பாடினார். பெல் திராவிடர் தொழிலாளர் கழகச் செயலாளர் ஆ.அசோக்குமார் “மந்திரமா? தந்திரமா?” நிகழ்ச்சியை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி.சி.வில்வம், மாவட்ட ப.க. தலை வர் பா.லெ.மதிவாணன், திருவெ றும்பூர் நகர தலைவர் சிவானந்தம், காட்டூர் கிளை கழக செயலாளர் சங்கிலிமுத்து, திருவரங்கம் நகர செயலாளர் முருகன், திருச்சி மாநகர அமைப்பாளர் கனகராசு, பெல் பாலகங்காதரன், துவாக்குடி நகர செயலாளர் விடுதலை கிருட் டிணன், பூலாங்குடி காலனி ஸ்டா லின், பெரியார் பிஞ்சு மேக்னா, பெல் ஆண்டிராசு, பஞ்சலிங்கம், அசோக் ராசா, சமத்துவபுரம் கணேசன், அண்ணாநகர் கனக ராசு, விடுதலை வாசகர் வட்டத்தை சேர்ந்த இராமசாமி, பெல் இராம கிருட்டிணன், அண்ணாநகர் அமுதா – சபாபதி, செவிலியர் அம்மணி அம்மாள், செம்மல் எச்.ஏ.பி.பி குமாரவேல், செந்தமிழினியன் உள்ளிட்ட இயக்கத் தோழர்களும், திமுக, மதிமுக, காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு வெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், பெல் ம.ஆறுமுகம் ஆகியோர் செய்திருந்தனர்.