சூளைமேட்டில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க பரப்புரை கூட்டம்

Viduthalai
5 Min Read

சூளைமேடு, மே 12- தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 4.05.2024 மாலை 6.30 மணி அளவில் சூளைமேடு சவு ராட்டிரா நகர் முதல் தெருவில் சூளைமேடு பகுதி தலைவர் நல். இராமச்சந்திரன் தலைமையி லும் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், மாவட்டத் துணைச் செயலாளர், சா.தாமோ தரன் மற்றும் தென் சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.இரா.மாணிக்கம் ஆகியோர் முன்னிலையிலும் சுயமரியாதை இயக்க நூற் றாண்டு தொடக்க விழா விளக்க பரப்புரை தெருமுனைக் கூட் டம் நடைபெற்றது.

மாவட்ட துணைச் செயலா ளர் கோ.வீ.ராகவன் வரவேற்பு ரையாற்ற, மாவட்டச் செயலா ளர் செ.ர.பார்த்தசாரதி தொடக்க உரையாற்றினார்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு. சண்முகப்ரியன் மற்றும் மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் ஆகியோர் விளக்கவு ரையாற்றினர்.
மாநில கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் அவர்கள் சுயமரியாதை இயக்கம் எப்படி தொடங்கியது, எதற்காக தொடங்கியது. சுயமரியாதை இயக்கத்தை தொடங்க வேண் டும் என்ற உணர்ச்சி தந்தை பெரியாருக்கு எப்படி எப்பொ ழுது தோன்றியது. சுயமரியாதை இயக்கம் தோன்றியிராவிட் டால் நம்முடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தி ருக்கும் என்பதை வடநாட்டு ஆதாரங்களை சுட்டிக்காட்டி யும், தந்தை பெரியார் சுயமரி யாதை இயக்கத்தை தோற்றுவிப் பதற்கு முன்பாக இருந்த நிலை மையை எடுத்துக்காட்டியும், தந்தை பெரியாரின் வாழ்க்கை யில் ஏற்பட்ட அனுபவங்களை எடுத்துக்காட்டி சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவிக்க அவைகளே உந்து சக்தியாக அமைந்தது என்பதையும் விளக்கி கூறினார்.

தந்தை பெரியார் தொடங்கிய ‘குடிஅரசு’ இதழ் மூலமாகவே முதலாவதாக சுயமரியாதை பிரச்சாரம் தொடங்கப்பட்டது. அதன் அடுத்த கட்டமாக சுயமரி யாதை இயக்கம் தோற்றுவிக்கப் பட்டது. அந்த இயக்கம் பிறகு திராவிடர் கழகமாக இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க கோட் பாடுகளை அடிப்படையாக வைத்து இன்று பல கட்சிகள் தோன்றி செயல்பட்டு வருகின்றன.

மனித உரிமைகள் போற்றப் படவில்லை, மனிதன் மனிதனாக மதிக்கப்படவில்லை, மனிதனுக் கான அடிப்படை உரிமைகள் வழங்கப்படவில்லை, எல்லாம் எல்லாருக்கும் என்ற நிலை இல்லை, பார்ப்பனர்களுக்கு அடிமையாக பார்ப்பன தத்து வங்களுக்கு அடிமையாக மட்டுமல்ல பார்ப்பனர்களையே கடவுளாக வணங்கும் நிலையில் இருந்தார்கள் .
இந்திய ஒன்றியமாக வெள் ளைக்காரர்களால் ஒன்றிணைக் கப்பட்ட இந்த இந்திய நாட்டில் இருக்கின்ற இது போன்ற பிரச்சினைகளை முன்வைத்து நமது தமிழ்நாட்டை மய்யமாகக் கொண்டு சுயமரியாதை இயக் கத்தை தந்தை பெரியார் தொடங்கினார்.

பல பெயர்களில் உலகில் பல கட்சிகள் தோற்றுவிக்கப்பட் டன. ஆனால் இங்கே தந்தை பெரியார் ஒருவர்தான் சுயமரி யாதை இயக்கம் என்ற பெயரில் சமூகப் புரட்சி இயக்கத்தை தொடங்கினார். சுயமரியாதை தான் மனிதனுக்கு முக்கியம் என்று உலகத்திற்கு உணர்த்தி யவர் தந்தை பெரியார். ‘மனிதன் என்றால் மானம் உள்ளவன் தான்!’ என்று மனிதனுக்கு விளக் கம் அளித்தார் தந்தை பெரியார்.

அழகுக்கு விளக்கம் தந்த பெரியார் ‘மனிதனுக்கு மானமும் அறிவும் அழகு’ என்று கூறினார். இதில் மானத்தை தான் முதன் மைப்படுத்தினார். மனிதன் மனிதனாக இருக்க வேண்டும் என்றால் உலக மொழிகளில் உள்ள சொற்களை எல்லாம் எடுத்து போட்டுப் பார்த்தால் சுயமரியாதை என்ற சொல்லுக்கு இணையாக எந்த சொல்லும் இல்லை என்றார்.
ஜெயிலுக்கு போகாமல் இருக்க வழக்குரைஞர் வைத்து எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய பலர் தயாராக உள்ள நிலையில் தந்தை பெரியார், சிறைக்கு செல்ல தயங்கியதே கிடையாது. வைக்கத்தில் கை, கால்களில் விலங்கிடப்பட்ட நிலையில் சளைக்காமல் கல்லு டைத்தவர் தந்தை பெரியார்.

பார்ப்பனர்களால் கட்ட மைக்கப்பட்ட கடவுள் தத்துவத் தில் கட்டுண்டு ஏமாற்றப்பட்டு, அடிமைத்தன்மையுடனும், கீழ் மக்களாக தமிழர்கள் வாழ்ந்து வருவதையும் விளக்கி கூறி; கட வுளின் பெயரால் நடத்தப்படும் கொடுமைகளையும் ஜாதி முறைகளையும் தகர்க்க தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கம் மூலமாக பரப்புரை செய்து போராடி வென்று காட்டினார்.
1921இல் கணக்கெடுக்கப் பட்ட ஒரு வயது முதல் 12 வயது வரை உள்ள கைம்பெண்கள் பட்டியலை படித்துக் காட்டி திருமண உறவுக்கு தகுதியே இல்லாத பெண்களுக்கு (1 முதல் -12 வயதுள்ள) அம்மா என்றே கூப்பிட தெரியாத ஒரு வயது குழந்தைக்கு திருமணம் செய்து வைத்த கொடுமையை, இந்து மதம் என்ற பெயரில் பார்ப் பனர்கள் செய்து வந்தனர். இதை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் போராடி வெற்றி கண்டது.

நீதிமன்றமே குற்றம் சுமத்தப் பட்ட மனிதன் இறந்து விட் டால், அதோடு முடித்துக் கொள் கிறது. ஆனால் இந்து மதத்தில் மனிதன் இருக்கும் போது மட்டும் சுரண்டப்படுவதில்லை இறந்த பின்பும் சுரண்டப்படு கிறான்.
சுயமரியாதை இயக்கம் எல்லோரும் படிக்கும் வாய்ப்பை உண்டாக்க வேண்டும், மனி தனை மனிதனாக மதிக்க வேண்டும் சுயமரியாதை உடன் வாழ வேண்டும் என்பதற்காக போராடி எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு வேலை வாய்ப்பு போன்றவற்றை பெற்று தந்தது.
‘நேக்கு தான் படிப்பு வரும்; நோக்கு வராது!’ என்று பார்ப் பனர்கள் சொன்னார்கள். சுய மரியாதை இயக்கத்தின் பயனால் இந்தியாவின் முதல் நிதி அமைச் சராக சர் ஆர். கே. சண்முகம் செட்டியாரும், முதல் சட்ட அமைச்சராக டாக்டர் அம் பேத்கரும் பொறுப்பேற்றனர். அம்பேத்கர் இந்திய அரசமைப் புச் சட்டத்தையே எழுதி கொடுத்தார்.
நீதி கட்சி படிக்கும் வாய்ப்பு தந்தது, காமராஜர் வந்தார், கல்வி நீரோடையை திறந்து விட்டார். திராவிட முன்னேற்ற கழகம் வந்தது கல்லூரி வரை படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தந்தது. தமிழ்நாடு உயர் கல்வியில் 52% , ஆல் இந்தியா டாப் – டாப் 10! பெண்களும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட் டோரும் அதிக மதிப்பெண் வாங்கி முன்னணியில் வந்து கொண்டுள்ளனர். நேக்கு தான் வரும் நோக்கு வராதுன்னு சொன்னிங்களே! நேக்கு வருது; நோக்கு ஏன் வரலை?
அறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் தொண்டை பற்றி கூறும் போது, ‘தூற்றியவர் களின் கண் முன்னே வெற்றியைக் கண்டவர்’என்றார்.

இன்று இந்தியா முழுக்க தந்தை பெரியார் தேவைப்படு கிறார். அன்று தந்தை பெரியா ரின் கொள்கைகளை ஏற்க மறுத்த காங்கிரஸ் கட்சி, இன்று தந்தை பெரியாரின் கொள்கை யின் தாக்கத்தினால் மாறுதல் அடைந்து இந்தியா முழுக்க இக்கொள்கைகளை எடுத்துச் செல்ல முனைப்பு காட்டுகிறது.
என்று கூறி தனது சிறப்பு ரையை முடித்தார்.

பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்க டேசன், தென்சென்னை மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.மாரியப்பன், இளை ஞரணி செயலாளர் ந. மணிதுரை, குன்றத்தூர் மு. திருமலை, மா.சண்முகலட்சுமி , எம்.ஜி.ஆர்.நகர் கரு.அண்ணாமலை, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச்செல்வன், தாம்பரம் நகர தலைவர் சு.மோகன்ராஜ், ஆவடி மாவட்ட க.பாலமுரளி, படப்பை சந்திரசேகரன், எஸ். ஜெயகோபி, ஆர். நீலகண்டன் (திமுக), டி. ராஜா, மா. சண்முக லட்சுமி, ம. மூவேந்தன், ரா. சேகர், பி. வெங்கட்ராமன், ரா. தமிழ்ச்செல்வி, அய்ஸ் அவுஸ் உதயசூரியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். எம்.டி.சி. பா. இரா ஜேந்திரன் நன்றி உரையாற்றினார்.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *