அண்ணா எழுதிய முதல் படைப்பாகக் கிடைப்பது ‘கொக்கரகோ’ எனும் சிறுகதை. அது ஆனந்த விகடனில் 1934ஆம் ஆண்டு பிப்பிரவரியில் வெளியிடப்பட்டது. அவர் இதழாசிரியராகப் பணியாற்றியதால் அவர் தீட்டிய இதழுரைகள் மட்டும் இண்டாயிரத்துக்கு மேற் செல்கின்றன. சொற்பொழிவுகளில் கிடைப்பவை மேடைப் பொழிவுகளாக இருநூறு சட்டமன்றச் சொற்பொழிவுகள் 1760 என்று பி.இரத்தினசபாபதி தமது ஆய்வுரையில் தொகுத்துள்ளார். அண்ணாவின் மேற்பார்வையுடன் பதிப்பிக்கப்பட்ட இலக்கியங்கள் ஆயிரத்து இருநூற்று முப்பத்தைந்து. அவை,
புதினங்கள் :6
குறும் புதினங்கள்:18
சிறுகதைகள் :117
மடல்கள் :314
கட்டுரைகள் :560
நாடகங்கள் :13
சிறு நாடகங்கள்:73
ஊரார் உரையாடல்:26
அந்திக் கலம்பகங்கள்:31
கவிதைகள் :77
—–
1235
—–
பேரறிஞர் அண்ணா ஒரு நாடக அறிஞர் எனும் நூலில் அண்ணா பரிமளம், அண்ணாவின் படைப்புகள், சொற்பொழிவுகளுடன் கணக்கிட்டுள்ளார்.