செங்கல்பட்டு, மே 11- கழக பொதுக்குழு உறுப் பினர் அ.ப.கருணாகரன் தலைமையில், 8.5.2024 அன்று மாலை 6.30மணிக்கு மறைமலைநகர் திருவள்ளுவர் மன்றத் தில் திராவிடர் கழகம்,, பகுத்தறிவாளர் கழகம் மற்றும், இனமான உணர்வு மிக்க பெருமக்களின் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நோக்கவுரையாற்றி னார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களின் கட்டளையை ஏற்று உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 50 சந்தாக்கள் சேர்த்தளிப்பது என முடிவுசெய்யப்பட்டது.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, குடிஅரசு நூற்றாண்டு விழாவினை அனைத்து கிளைக்கழகங்களிலும் நடத் துவதென தீர்மானிக்கப்பட்டது.
செங்கல்பட்டுமாவட்டம் அஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி +2 தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்றமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மு.அருண்குமார், நகர கழக தலைவர் திருக்குறள் வெங்க டேசன், நகரசெயலாளர் ப.முருகன், மாவட்ட ப.க.தலைவர் அ.சிவக்குமார், மாவட்ட ப.க.செயலாளர் தி.தீனத யாளன், மு.பிச்சைமுத்து, சே.சகாயராசு, பொறியாளர் த.பர்தீன், தென்காசி மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் சீ.செங்கதிர் வள்ளுவன். ந.மணிமொழி ஆகியோர் பங்கேற்று கருத்துரை வழங்கியதுடன் ஒவ்வொரு வரும் அய்ந்து சந்தாக்கள் சேர்த்து தர உறுதி கூறி புத்தகங்கள் பெற்று மகிழ்ந் தனர். புதிதாக நம்மோடு இணைந்து கொண்ட காந்திநகர் ம.ஏழுமலை பயனாடை போர்த்தி வரவேற்கப்பட் டார்.