திருப்பத்தூர், மே 11- சுயமரி யாதை சுடரொளிகள் ஏ. டி. கோபால் மற்றும் கே. கே.சின்னராசு ஆகியோர் களின் நினைவாக திருப் பத்தூரில் புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள ஏ. டி. ஜி. தேனீர் கடை அருகில் நீர் – மோர் பந்தல் அமைத்து, பொதுமக்க ளின் தாகம் தீர்க்க தர் பூசணி, மோர், பழச்சாறு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் கே. சி. எழிலரசன், ஏ. டி. ஜி. இந்திரஜித், திருப்பத்தூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, நகர மன்ற தலைவர் சங் கீதா வெங்கடேசன், தி.மு.கழக பொறுப் பாளர்கள், தோழர்கள் மற்றும் திராவிடர் கழக தோழர்கள் மாவட்ட செயலாளர் பெ.கலை வாணன், மாநில துணைச் செயலாளர் சி.ஏ.சிற்றர சன், மாவட்ட இளைஞரணி விடுதலை வாசகர் அமைப்பாளர் எம். என்.அன்பழகன், மாவட்ட ப. க. தலைவர் சி. தமிழ்ச்செல்வன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், கந்திலி ஒன்றிய செயலாளர் இரா. நாகராசன் மற்றும் தோழர்கள் ஏராளமா னோர் பங்கேற்றனர்.
வெயிலின் தாக்கம் குறையும் வரை பொது மக்களின் தாகத்தை தீர்க்க நீர் – மோர் தொடர்ந்து வழங்கப் படும் என்று அறிவிக்கப் பட்டது.
திருப்பத்தூரில் சுயமரியாதை சுடரொளிகள் நினைவாக நீர் – மோர் பந்தல்
Leave a Comment