தஞ்சை சித்திரக்குடியில் கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை
சித்திரக்குடி, மே 11- ஆவடி மாவட்ட திராவி டர் கழக செயலாளர் க.இளவரசன் அவர் களின் தாயார் க.காமு அம்மாள் கடந்த
8-5-2024 புதன் கிழமை அதிகாலை 3 மணிக்கு தஞ்சாவூர் சித்திரக்குடியில் கால மானார். தகவலறிந்தவுடன் ஆவடி மாவட்ட கழக தலைவர் வெ.கார்வேந்தன், துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் மாவட்ட கழக தொழிலாளரணி தலைவர் கி.ஏழுமலை, அம்பத்தூர் பகுதி கழகத் தலைவர் பூ.ராமலிங்கம், செயலாளர் அய்.சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் எ.கண்ணன், அம்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் அ.வெ.நடராசன், முகப்பேர் முரளி ஆகியோர் நேரில் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தி இளவரசன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ் அவர்கள் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அம்மையாரின் இறுதி நிகழ்வு, அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சுய நினைவுடன் எழுதிய அறிக்கையின்படி எந்தவித சடங்குமின்றி நடைபெற்றது. அதற்கு முன் அம்மையாரின் படத்தை நிதித்துறை ஆலோசகர் (பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக் கழகம்) சு.பழநிராசன் தலைமையில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார் திறந்து வைத்து நினைவுரை ஆற்றினார்.
கழக மாநில அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, ஊடகத்துறை தலைவர் மாநில பகுத்தறிவாளர் கழகம் மா.அழகிரிசாமி, மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு பழனிவேல், ஆவடி மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன், தஞ்சாவூர் மாநகர கழகத் தலைவர் பா.நரேந்திரன், பூதலூர் ஒன்றிய கழகத் தலைவர் அள்ளூர் பாலு, செயலாளர் முல்லைக்கொடி புகழேந்தி, தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூர் ஒன்றிய கழகத் துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, சித்திரக் குடி கலைக்கோவன் ஆகியோர் நினைவு ரையாற்றியபின் இளவரசன் நன்றி கூற மாலை 6 மணிக்குக் கழக தோழர்களின் வீர வணக்க முழக்கத்துடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டு, சித்திரக்குடி இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.