‘‘சனாதனம் வேறு; ஹிந்து மதம் வேறு – அமைச்சர் சேகர்பாபு புது விளக்கம்!” என்று தலைப்பிட்டு, ‘தினமலர்’ (9.9.2023, பக்கம் 15) செய்தி ஒன்றை வெளி யிட்டுள்ளது.
அமைச்சர் கூறியது புது விளக்கம் என்று ‘தினமலர்’ கூறுவதால், இரண்டும் ஒன்று என்று ‘தினமலர்’ கூறுகிறது.
அதாவது, ஹிந்து மதம்தான் சனாதனம் என்றால், இதன் பொருள் வருணதர்மம் – ஜாதி தர்மம் இருக்க வேண்டும். ‘பிராமணன்’ இருக்கவேண்டும்; ‘சூத்திரன்’ இருக்கவேண்டும்.
சூத்திரன் என்றால் விபச்சாரி மகன் என்று கூற வேண்டும் என்பதுதான் ‘தினமலர்’ திரிநூல் கூட்டத்தின் எண்ணம்.
‘சூத்திரச்சி வேலைக்கு வந்துவிட்டாளா?’ என்று ஒரு காலத்தில் சொன்ன அக்கிரகாரவாசிகள், ஆட்சி அதிகாரம் வந்து விட்டதால், சிண்டுகள் மீண்டும் விறைக்கின்றனவா?