சென்னை, நவ. 20- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர்-நடத்துநர் (டி அண்ட் சி) பணிக்கான எழுத்துத் தேர்வு நேற்று (19.11.2023) நடைபெற் றது.
2015ஆ-ம் ஆண்டுக்குப் பின்னர் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப் பணியிடங்கள் படிப் படியாக நிரப்பப் படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத் துக்கு 685 ஓட்டுநர்-நடத்து நர் (டி அண்ட் சி) பணி களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, இணையதளம் வாயிலாக செப்.19-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இந்தப் பணிக ளுக்கு 10,600 பேர் இணைய தளம் வாயிலாக விண்ணப் பித்திருந்த நிலையில், தகுதி வாய்ந்த 1,600 பேர் குறித்த விவரங்கள் வேலை வாய்ப்புத்துறை அலுவல கத்தில் இருந்தும் பெறப் பட்டது. இவர்கள் அனை வருக்கும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப் பட்டது.
இந்நிலையில், சென்னை (அண்ணா பல்கலைக்கழ கம்), கோவை, திருநெல் வேலி உள்ளிட்ட 10 இடங் களில் நேற்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்காக, அந்தந்த போக்குவரத்துக் கழக மண்டலங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக் கப்பட்டன. ஏற்கெனவே அறிவித்தபடி, பொதுத் தமிழ், பொது அறிவு மற்றும் தொழில் முறை திறனறிதல் குறித்த வினாக் கள் 100 மதிப் பெண்களுக்கு இடம்பெற்றிருந்தன. நடைமுறைக் கேள்விகள் என்பதால், தேர்வு கடின மாக இல்லை என தேர் வர்கள் தெரிவித்தனர். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி, சான்றிதழ் சரி பார்ப்பு, திறன் தேர்வு, நேர் காணல் போன்றவை நடத் தப்பட உள்ளன. இதற் கான தேதிகள் வரும் நாட் களில் அறிவிக்கப்படும். இதுவரை போக்குவரத்துக் கழகங்களில் நேரடியாக வும், வேலைவாய்ப்பு அலு வலகம் மூலமாகவும் மட் டுமே தேர்வு செய்யப்பட்ட நிலையில், முதன்முறையாக எழுத்துத் தேர்வு நடைபெற்றது.