9.05.2024 அன்று காலை 10 மணியளவில் திராவிட தொழிலா ளரணி மாநில செயலாளர் மு.சேகர் முன்னிலையில் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசாவை பெரம்பலூர் மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் சந்தித்து விடுதலை சந்தா சேர்க்கும் நிலையினை தெரிவித்தோம்.
உடனே மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் கழகம், மாணவரணி, இளைஞரணி மகளிரணி, மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் அனை வரும் விடுதலை வாங்கிப் பயன டைய வேண்டும் என்று கூறினார்.
பெரம்பலூர் மாவட்ட விடுதலை பொறுப்பாளர் மு.சேகர் அவர்களுடன் மாவட்ட தலைவர் சி.தங்கராசு, மாவட்ட செயலாளர் மு.விசயேந்திரன், நகரத்தலைவர் ந.ஆறுமுகம், சின்னசாமி, நட ராஜன், பொன்னுசாமி ஆகியோர் சென்றிருந்தோம். தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர், மாவட்ட செய லாளர், ஒன்றிய பொறுப்பாளர் களும் இருந்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றோம்.