சென்னை, மே 10 சென்னை மாநகராட்சி கால்நடை மருத்துவ அலுவலர் ஒருவர் கூறியதாவது:-
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு உரிய உரிமம் பெறப்பட்டுள்ளதா என்று மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்யப்ப டுகிறது. சிறுமியை நாய் கடித்த சம்பவத்திற்கு முன், அதாவது 5-ஆம் தேதிக்கு முன்பு வரை 397 பேர் மட்டுமே உரிமம் கோரி விண்ணப்பித்து இருந்தனர்..
சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த 3 நாட்களில் மட்டும் 1,390 விண்ணப்பங்கள் பெறப்பட் டுள்ளன. இதில், 280 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பெறப்பட் டுள்ள விண்ணப்பங்களை தீவிரமாக ஆய்வு செய்து முறையான ஆவணங்கள் பெற்ற வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கி வருகிறோம். பதிவேற்றம் செய்யும் போது நாயின் ஒளிப்ப டம், வயது, இனம், ரேபிஸ்நோய் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் ஆகியவற்றை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். 20 ஆயிரம் பேர் வரை விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்