சென்னை, செப்.9 தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தி 2021-_2022-ஆம் ஆண்டில், 8.68 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஒன்றிய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு நிறுவனமான மின் வாரியத்துக்கு மட்டுமின்றி தனியார் நிறுவனங் களுக்கும் அனல், எரிவாயு, காற் றாலை, சூரியசக்தி மின்நிலையங்கள் உள்ளன. இவை தவிர, ஒன்றிய அரசின் நெய்வேலி நிலக்கரி நிறு வனம், தேசிய அனல்மின் கழகம், இந்திய அணுமின் கழகம் ஆகிய வற்றுக்கு தமிழ்நாட்டில் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் உள்ளன. ஒன்றிய மின்சார ஆணை யம் 2021-_2022-ஆம் ஆண்டுக்கான நாட்டின் மின்னுற்பத்தி புள்ளிவிவ ரங்களை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு 5-ஆவது இடம்
இதன்படி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங் கானா, கருநாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு ஆகியவற்றை உள்ளடக்கிய தென் மாநிலங்களில் 33,712 கோடியூனிட் மின்னுற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2020-_2021இ-ல் 28,994 கோடி யூனிட்களாக இருந்தது. தமிழ்நாட்டின் மொத்த மின் னுற்பத்தி 2021-_2022ஆ-ம் ஆண்டில் 5,691 கோடி யூனிட்களாக இருந் தது. இது அதற்கு முந்தைய ஆண் டில் 5,237 கோடி யூனிட்களாக இருந்தது. அதாவது, 8.68 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாடு 5-ஆவது இடத்தைப் பிடித்துள் ளது.
அதே சமயம், கேரளா, தெலங் கானா, கருநாடகாவில் மின்னுற் பத்தி இரட்டை இலக்கத்தை எட் டியுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்த மின் நிறுவு திறன் 34,706 மெகாவாட். இதில், தமிழ்நாடு மின்வாரி யத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள், 2,321 மெகாவாட் திறனில் 47 நீர்மின் நிலையங்கள், 516 மெகாவாட் திறனில் 4 எரிவாயு மின்நிலை யங்கள் உள்ளன.
6,972 மெகாவாட் ஒதுக்கீடு
ஒன்றிய மின் நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு தினசரி 6,972 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மின்வாரியத் தின் அனல்மின் நிலையங்களில் இருந்து தினமும் சராசரியாக 8 கோடி யூனிட்களும், நீர்மின் நிலை யங்களில் ஒரு கோடி யூனிட்களும், எரிவாயு மின்நிலை யங்களில் இருந்து 40 லட்சம் யூனிட்களும் மின்னுற்பத்தி செய்யப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.