சென்னை மே 10 தமிழகத்தில் இன்று முதல் 15-ஆம் தேதி வரைஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 12-ஆம் தேதி கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும்.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்னிந் திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதி களிலும் இன்று முதல் 13-ஆம் தேதிவரை பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14, 15-ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 12ஆ-ம் தேதி கோவை மாவட் டத்தின் மலைப்பகுதிகள், திண் டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 13-ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் உள் மாவட் டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் 106 டிகிரி, இதர தமிழ்நாடு மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் 102 டிகிரி, கடலோர தமிழ்நாடு மாவட் டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 98 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெப்பநிலை இருக்கக் கூடும்.
கோடை மழையால்
குறைந்த வெப்பநிலை:
தமிழ்நாட்டில் பல்வேறு இடங் களில் கடந்த 3 நாட்களாக கோடை மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மாநிலத் தில்பல்வேறு நகரங்களில் வெப்ப நிலை குறைந்திருப்பதுடன், 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் பதிவான இடங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந் துள்ளது. அதன்படி, நேற்று மாலை 5.30 மணிக்கு பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக, கரூர் பரமத்தியில் 107 டிகிரி, ஈரோட்டில் 106 , திருச்சி, நாமக்கல், மதுரை விமான நிலை யம் ஆகிய இடங்களில் தலா 103 , சேலத்தில் 102, கோவை, மதுரை மாநகரம், பாளையங்கோட்டை, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 101, திருத்தணி மற்றும் வேலூ ரில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.