சென்னை, மே 10- தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக் கிலும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி, தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் அவர் மீது தேர்தல் ஆணையம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மதக் கலவரத்தை உண்டாக்கும் நோக்கிலும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை சார்பில் அவசர முறையீடு செய்யப்பட் டது. இதனை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ்சந்திரா, கலைமதி அமர்வு, மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், வழக்கில் பிரதமர் பெயரை சேர்த்திருப்ப தால், அதனை பட்டியலிட நீதி மன்றம் மறுப்பதாக காங்கிரஸ் வழக்குரைஞர்கள் குற்றம் சாட் டியுள்ளனர்.