சென்னை, மே 9– சென்னை தரமணியில் உள்ள பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா வளாகத்தில் உலக பத்திரிகை சுதந்திர நாள் விழா கொண்டாடப் பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சென்னை அமெ ரிக்க துணை தூதரகம் மற்றும் பிரஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா சார்பாக ‘பேனி லவ் ஹமர்ஸ் அமெரிக்கா’ என்ற கருத்து சுதந்திரம் குறித்து பேசும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. பின்னர் திரைப்படம் உணர்த்தும் விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் சென்னை அமெ ரிக்கா துணை தூதரகத்தின் செய்தி பிரிவு அதிகாரி சமந்தா ஜாக்சன் மற் றும் பத்திரிகை துறையை சார்ந்த பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி யின் பின் அமெரிக்க துணை தூதர கத்தின் செய்தி பிரிவு அதிகாரி சமந்தா ஜாக்சன் செய்தியாளர்களிடம் கூறு கையில், பத்திரிகை சுதந்திரம் ஜன நாயகத்திற்கு மிகவும் முக்கியமானது. அமெரிக்கா வில் கருத்து சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படு கிறது. இன்று திரையிடப்பட்ட ‘பேனி லவ் ஹமர்ஸ் அமெரிக்கா’ என்ற ஆவ ணப்படமும் இதைத் தான் வலியுறுத் துகிறது என்றார்.
சென்னையில் உலக பத்திரிகை நாள் விழா: பத்திரிகை சுதந்திரத்தை வலியுறுத்தும் ஆவணப்படம் வெளியீடு
Leave a Comment