9.5.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிணை குறித்து நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
“3 கட்ட தேர்தல் முடிந்த நிலையில் பிரதமர் நாற்காலி ஆட்டம் காண தொடங்கியுள்ளது. இதையடுத்து தனக்கு நெருக்கமான நண்பர்களையே மோடி தாக்க ஆரம்பித்து விட்டார். இது தேர்தலில் ஏற்படும் மாற்றங்களை காட்டுவதற்கான ஒரு சமிக்ஞையாகும்’’ என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு.
அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
கனடா நாட்டில் காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசுக்கு பங்கு உண்டு என மீண்டும் கனடா அரசு சார்பில் கருத்து.
அரியானாவில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் மெஜாரிட்டியை இழந்த பாஜகவுக்கு அது கையாண்ட மருந்தே பாதிப்பை தந்துள்ளது என்கிறது தலையங்கம்.
அரியானா அரசியலில் பரபரப்பு. பாஜகவுக்கு ஆதரவு தந்த ஜே.ஜே.பி. கட்சி காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு. மைனாரிட்டி பாஜ அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்த காங். முடிவு
இந்தியன் எக்ஸ்பிரஸ்
ஆந்திராவை பிரதமர் மோடி 10 ஆண்டுகளாக ஏமாற்றி விட்டார், மாநிலத்தில் நுழைய தகுதியற்றவர் என காங்கிரஸ் கட்சியின் ஆந்திர மாநில தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா காட்டம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
ராகுலுக்கு அதானி, அம்பானி டெம்போவில் கருப்பு பணம் பிரதமர் மோடி பேச்சுக்கு,
‘மோடி ஜி, உங்களுக்கு கொஞ்சம் பயமா?’: அதானி, அம்பானியிடம் இருந்து ‘கறுப்புப் பணம்’ குறித்து விசாரிக்க பிரதமருக்கு ராகுல் சவால். “பொதுவாக நீங்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் அதானி மற்றும் அம்பானியை பற்றி பேசுகிறீர்கள். ஆனால், முதல்முறையாக அதானி மற்றும் அம்பானியை பற்றி பொதுவில் பேசுகிறீர்கள்” என்று காணொலியில் ராகுல் பதிலடி.
தி இந்து
உ.பி.யில் இதுவரை தேர்தல் நடந்த மேற்கு பகுதியில் இருந்து இதர பகுதிகளில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹிந்து – முஸ்லீம் பிரச்சினை எடுபடவில்லை. மக்கள் வாழ்வாதாரம், பணவீக்கம் மற்றும் இட ஒதுக்கீடு குறித்து கடினமான கேள்விகளை கேட்கிறார்கள். மண்டல் பகுதியை நோக்கி வாக்குப்பதிவு நகர்ந்துள்ள நிலையில், பாஜக ஆட்சி குறித்த விமர்சனங்கள் மேலோங்கி உள்ளது என்கிறார் கட்டுரையாளர் அஞ்சு குமார்.
தி டெலிகிராப்
அச்சே தின் அல்லது ஒரு தின்? தர்பங்காவில் உள்ள காதி கிராமோத்யோக் ஊழியர்கள் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியை மதிப்பிடுகின்றனர். ‘எதற்கும் சாமானியனுக்கு தொல்லை, பதற்றம் அதிகமாகிவிட்டது. நோட்டுப் பந்தி (பணமதிப்பிழப்பு), ஜிஎஸ்டி, அதிக எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு விலை போன்றவை சில உதாரணங்கள்.
‘பொய்களின் தொழிற்சாலை’ பிரதமர் மோடி என தேஜஸ்வி சாடல்.
-குடந்தை கருணா