சென்னை, மே 9- தமிழ்நாட்டில் 53.74 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக வேலைவாய்ப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டில் மாவட்ட, மாநில வேலைவாய்ப்பு அலு வலகங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி 53 லட்சத்து 74 ஆயிரம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத் திருக்கின்றனர். இதில் ஆண்கள் 24 லட்சத்து 74 ஆயிரத்து 985 பேரும், பெண்கள் 28 லட்சத்து 98 ஆயிரத்து 847 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 284 பேரும் பதிவு செய்துள்ளனர். அதேபோல் பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 1.49 லட்சம். இவர்களில் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் 10 லட்சத்து 69 ஆயிரம் பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள் 23 லட்சத்து 62 ஆயிரம் பேரும் பதிவு செய்துள்ளனர்.