பட்டுக்கோட்டை, மே 9- பட்டுக்கோட்டை கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மதுக்கூர் மாணிக்க சந்திரன் துணைவியார் சரோஜா அம்மையார் உடல் நலக்குறைவு காரணமாக 7.05.2024 அன்று இரவு மறைவுற்றார்.
செய்தியறிந்து பட்டுக்கோட்டை மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட கழக செயலாளர் மல்லிகை வை. சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் பேரா வூரணி இரா. நீலகண்டன், மாவட்ட கழக அமைப்பாளர் சோம. நீலகண்டன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் ஆ. இரத்தின சபாபதி, மாவட்ட செயலாளர் புலவஞ்சி இரா. காமராஜ், புரவலர் என். கே .ஆர்.நாராயணன், பட்டுக் கோட்டை நகர கழக தலைவர் பொறியாளர் சிற்பி வை.சேகர், மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் அ.அண்ணா துரை, மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் முத்து துரைராஜ், மாவட்ட கழக துணைத் தலைவர் கு.சிவாஜி, ஒப்பந்தகாரர் பேராவூரணி மு.மோகன், சேது பாவாசத்திரம் ஒன்றிய கழக செயலாளர் ஆ.சண்முகவேல், மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழக தலைவர் புலவஞ்சி பெ.அண்ணா துரை, ஒன்றிய கழகச் செயலாளர் அத்திவெட்டி வை.ஆடலரசு, அமைப்பாளர் சிரமேல்குடி நா.வை. இராதா கிருஷ்ணன், மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் கருப்பூர் முருகேசன், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் மன்னங்காடு ம.சிவஞானம், பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் ரெ.ஆசைபாண்டி, திராவிட முன்னேற்றக் கழக மதுக்கூர் ஒன்றிய செயலாளர் லண்டன் கோவிந்தராஜ் உட்பட அனைத்து கட்சி பிரமுகர் களும் கலந்து கொண்டு அம்மையார் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள். பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் மாணிக்க சந்திரனிடம் தொலைபேசி வழியாக ஆறுதல் தெரிவித்து உரையாடினார். மறைந்த அம்மையார். ச.சரோஜாவுக்கு அண்ணாதுரை, கருணா என்ற இரு மகன் களும் கனிமொழி என்ற ஒரு மகளும் உள்ளனர். அம்மை யாரின் இறுதி நிகழ்வுகள் 8.5.2024 அன்று நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது.