கல்லக்குறிச்சி, மே 9- கல்லக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகில் 05.05.2024 அன்று கல்லக்குறிச்சி மாவட்ட கழக சார்பில் சுய மரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட கழக காப்பாளர் ம.சுப்பராயன் தலைமை வகித்தார். கல்லை நகர கழக தலை வர் இரா.முத்துசாமி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட கழக துணைத் தலைவர் குழ.செல்வராசு, கல்லக்குறிச்சி தெற்கு மாவட்ட ஒன்றிய திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், வழக்குரைஞருமான சி.வெங்கடாசலம், மாவட்ட கழக இளைஞரணி தலைவர் அ.கரி காலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டதில் கழக சொற்பொழி வாளர் பேராசிரியர் பூ.சி.இளங் கோவன் கலந்துக்கொண்டு சொற் பொழிவாற்றினார். அவர் தனது உரையில்:
தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தையும் அதன் பிரச்சார ஏடான பச்சை அட்டை குடிஅரசு இதழையும் துவக்கி 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த சுயமரியாதை இயக்கம் தான் ஒடுக்கப்பட்ட மக்களை – தாழ்த்தப்பட்ட மக்களை – படிக்கவைத்தது; உத்தியோகங்கள் பெறவைத்தது. பெண்களை ஆண் களுக்கு நிகராக சுயமரியாதையுடன் வாழவைத்தது. இதற்கெல்லாம் காரணம் சுயமரியாதை இயக்கம் பெற்றுத்தந்த வகுப்பு வாரி பிரதிநிதித்துவமேயாகும். பெரியாரின் சுயமரியாதை கொள்கைகளை நடைமுறைப்படுத்தி தமிழ் நாட்டை திராவிட கட்சிகள் ஆண் டதாலும், தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும் தமிழ்நாடு இந்தியாவின் மற்ற மாநிலங்களுக் கெல்லாம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் முன்னேற் றத்தை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ்.- அரசு நீட், கியூட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்க நினைக்கிறது. இடஒதுக் கீட்டு கொள்கையை நீக்கி, ஸநா தன தர்மம் மூலம் ஆட்சி செய்ய விரும்புகிறது. ஒன்றிய அரசின் இத்தகைய நடவடிக்கைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கண் டனக் குரல் எழுப்பியும் விடுதலை இதழில் அறிக்கை எழுதியும் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
நாம் அனைவரும் விழிப்பாக இருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணைப்படி செயல் பட வேண்டும் என்று கூறி முடித்தார்.
அவரை தொடர்ந்து மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணித் தலை வர் கோ.வேல்முருகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பெ.எழிலரசன், எழுத்தாளர் முத் தமிழ் முத்தன், சங்கராபுரம் ஒன்றிய திராவிட மாணவர் கழக அமைப்பாளர் மா.ஏழுமலை உள் பட பலர் உரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீர.முருகேசன்; அமைப் பாளர் சி.முருகன், ரிஷிவந்தியம் ஒன்றிய கழகத் தலைவர் அர.சண் முகம், கல்லக்குறிச்சி ஒன்றிய கழகத் தலைவர் பூ.மகேந்திரன், மாயக்கண்ணன் உள்பட பலர் கலந்துக்கொண்டார்கள். இறுதி யாக கல்லை நகர செயலாளர் நா.பெரியார் நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.