தொழிலாளர்துறை சார்பில் அறிவுறுத்தல்
சென்னை, செப். 9– குழந்தைகள், வளரி ளம் பருவத்தினரை எந்தப் பணிகளிலும் ஈடு படுத்த வேண்டாம் என்று தொழி லாளர்துறை சார்பில் அனைத்து வேலை அளிப் போரிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை எஸ்அய்சிசி அரங்கில் வட சென்னையில் குழந்தை மற்றும் கொத் தடிமைத் தொழிலாளர் களை கண்டறிதல், மீட்டெடுத்தல் மற்றும் மறுவாழ்வு அளித் தலில் உள்ள இடர்பாடுகளை கண்டறியும் பொருட்டு விழிப்புணர்வுப் பட்டறை நடை பெற்றது.
இதில், எந்தப் பணியிலும் குழந்தைகளையும் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் களை அபாயகரமான பணிகளிலும் சட்ட விதிகளின்படி பணியமர்த்தக் கூடாது என்றும், விதி முறைகளை மீறி அவர்களை பணிய மர்த்துவதால் சட்ட விதிகளின்படி அபராதம் மற்றும் சிறை தண்டனை களுக்கு உள்ளாக நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டு, குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் கொத் தடிமைத் தொழிலாளர்களை பணியமர்த்து வதை தடுப்பது தொடர்பாக வேலையளிப் போர்களிடம் கருத்து கேட்டறியப் பட்டது.
அதில் வேலையளிப்பவர்கள் சங்கத் தினர் இனி எதிர்வரும் காலங்களில் குழந் தைத் தொழிலாளர் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் எவரையும் பணியமர்த்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற உறுதியளித்தனர்.
அத்துடன், உறுதிமொழி படிவத்திலும் கையொப்பமிட்டனர். மேலும் இனி எதிர் வரும் காலங்களில் குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் முறை அகற்றுதலில் அரசுக்கு உறு துணையாக இருந்து, தமிழ்நாட்டில் குழந்தை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்கள் இல் லாத மாநிலமாக மாற்ற தங்களின் பங்களிப்பினை வழங்குவதாகவும் உறுதியளித்தனர்.
நிகழ்ச்சியில், கூடுதல் தொழிலாளர் ஆணை யர்கள் சி.ஹேமலதா, உ. உமா தேவி, தொழிலாளர் இணை ஆணையர்-1 விமல நாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.