இராணிப்பேட்டை, நவ. 20 – இராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் பரிசாக வழங் கப்படும் விடுதலைக்கு ,சந்தாக்கள் சேர்க்கும் பணியை 19.11.2023 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தொடங்கி வைத்தார்.
காப்பாளர் பு.எல்லப் பன், மாவட்டத்தலைவர் சு.லோகநாதன், மாவட் டச் செயலாளர் செ கோபி.ஆகியோருடன் வீடுதோறும் சென்று சந் தாக்கள் சேர்க்கப்பட் டது.
சம்பத்துராயன் பேட்டையில்பெருந் தகையாளர் இரா.நந்தன்-ஆனந்தி இணையர் விடுதலை, உண்மை, பெரியார்பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ்களுக்கு ஓராண்டு சந்தா, மதிமுக ஒன்றிய செயலாளர் தெ.ஆறு முகம் ஓராண்டு விடுதலை சந்தா, பெரப்பேரி ஆசிரி யர் சிவசோதி, ஆசிரியர் இராவணன், சிங்கப்பூர் சங்கர், ஒன்றிய திக செய லாளர் சு.சங்கர், அம்மூர் வழக்குரைஞர் கே.தணிகா சலம், காவேரிப்பாக்கம் மேனாள் திமுக செயலா ளர் போ.பாண்டுரங்கன், பெரியார் பெருந்தொண் டர் ராணிப்பேட்டை பொ.பெருமாள் ஆகி யோர் ஓராண்டு விடு தலை சந்தா வழங்கினர்.
காப்பாளர் பு. எல்லப் பன், மாவட்டத்தலைவர் சு.லோகநாதன் மாவட் டச் செயலாளர் செ. கோபி, மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலை வர் த.க.பா.புகழேந்தி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ந.இராமு, பெரியார் பெருந் தொண்டர் பொ.பெரு மாள், மாவட்டத் துணைத் தலைவர் பொன்.வெங்கடேசன் ஆகியோர் தலா பத்து சந்தாக்கள் திரட்டித் தந்திடுவோம் என்று கூறி உறுதியேற் றார்கள்.