இயக்க மாநாடுகள், பொதுக் கூட் டங்கள் மற்றும் இயக்க நிகழ்ச்சிகளில் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக கொள்கை உறுதியோடு பங்கேற்று வந்த அம்புஜத்தம்மாள் (வயது 95) அவர்கள் நேற்று (7.5.2024) இரவு மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று (8.5.2024) மாலை 5 மணிக்கு இறுதி ஊர்வலம் நடைபெறும்.
தன் மகளுடன் கல்கண்டார் கோட்டையில் இருந்து வந்தார். மறைந்த அம்புஜத்தம்மாள் உடலுக்கு திருச்சி மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலை மையில் காட்டூர் கிளை தலைவர் ரெ.காமராஜ், காட்டூர் ம.சங்கிலி முத்து. காட்டூர் தெ.பாலசுப்ரமணியம்.திருச்சி மாநகர் அமைப்பாளர் சி.கனகராஜ். விஜயராகவன் மற்றும் தோழர்கள் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.
வருந்துகிறோம்
Leave a comment