ஆசிரியர்கள் பொது மாறுதல் வரும் 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தொடக்க கல்வித்துறை அறிவிப்பு

3 Min Read

சென்னை, மே 8- தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல் படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற் றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் தலைமை ஆசிரியர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அட்டவணையை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி பொதுமாறுதல் கோருவோர் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களை எமிஸ் மூலம் பதிவேற்றம் செய்ய தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கு பணியிட மாறுதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கலந்தாய்வு நடத்தி வழங்கப்படுகிறது.அதன்படி இந்த ஆண்டுக் கான பணியிட மாறுதல் கலந் தாய்வு தற்போது தொடங்க உள்ளது.

இதையடுத்து, தொடக்க கல்வித்துறையில் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், இடை நிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்காக நடத்தப் பட உள்ள கலந்தாய்வு தொடர் பான அட்டவணையை தொடக்க கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அது குறித்த விவரம் வருமாறு:

பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களைத் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கல்வி மேலாண்மை தகவல் முகமை (EMIS) வாயிலாக 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

*  பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து வகை ஆசிரியர்களின் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் (Seniority List) மற்றும் காலிப் பணியிட விவ ரங்கள் (Vacancy List) 20ஆம் தேதி வெளியாகும்.

*  முன்னுரிமைப் பட்டியலில் திருத்தம் மற்றும் முறையீடுகள் ஏதும் இருந்தால் 21ஆம் தேதி தெரிவிக்க வேண்டும்.

*  மாறுதல் விண்ணப்பங் களின் இறுதி முன்னுரிமை பட்டியல் 23ஆம் தேதி வெளியிடப்படும்.

* 24ஆம் தேதி மாலை சுழற்சி மாறுதல் கலந்தாய்வு நடக்கும்.

* இடைநிலை ஆசிரியர் களுக்கான பணிநிரவல் கலந் தாய்வு 28ஆம் தேதி நடக்கும்.

* நடுநிலைப் பள்ளி தலை மையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) 31ஆம் தேதியும், நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) ஜூன் 1ஆம் தேதி முற்பகலிலும், நடு நிலைப் பள்ளி தலைமையா சிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) அதேநாளில் பிற்பகலிலும் நடக்கும்.

* ஜூன் 3ஆம் தேதி, நடுநிலைப் பள்ளி தலைமை யாசிரியர்கள் மாறுதல் கலந் தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) நடக்கும்.

* பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத் திற்குள்) ஜூன் 6ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் மாறு தல் கலந்தாய்வு (கல்வி மாவட் டத்திற்குள்) 7ஆம் தேதி (முற் பகல்), பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 7ஆம் தேதி (பிற்பகல்), பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந் தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 8ஆம் தேதியும் நடக்கும்.

* தொடக்கப் பள்ளி தலை மையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) – 10ஆம் தேதி, தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) ஜூன் 11ஆம் தேதி (முற்பகல்), தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியர்கள் மாறுதல் கலந் தாய்வு (வருவாய் மாவட்டத் திற்குள்) 11ஆம் தேதி (பிற்பகல்), தொடக்கப் பள்ளி தலைமை யாசிரியர்கள் மாறுதல் கலந் தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 12ஆம் தேதி நடக்கும்.

* இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றி யத்திற்குள்) ஜூன் 13ஆம் தேதியும், கல்வி மாவட்டத் திற்குள்ளான கலந்தாய்வு 14ஆம் தேதி (முற்பகல்), மாவட் டம் விட்டு மாவட்டத்துக்கான கலந்தாய்வு 15ஆம் தேதியும் நடக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *