மந்தைவெளியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா விளக்க பரப்புரைக் கூட்டம் தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது!

Viduthalai
4 Min Read

கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி விளக்கவுரை

சென்னை, மே 8 தந்தை பெரியாரின் கொள்கை வழித் திட்டமே இந்தியாவிற்கு தேவையானது என்று அனைவரும் உணர்ந்துள்ளனர் என் றார் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்கள்.
தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கடந்த 2.05.2024 அன்று மாலை 7.30 மணி அளவில், தென் சென்னை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் இரா.மாரிமுத்து தலைமையிலும், தென் சென்னை மாவட்ட துணை தலைவர் டி.ஆர். சேதுராமன் மற்றும் மாவட்டத் துணைச் செய லாளர் சா.தாமோதரன் ஆகியோர் முன்னிலை யிலும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தொடக்க விழா விளக்க பரப்புரை தெரு முனைக் கூட்டம் மந்தைவெளியில் நடை பெற்றது.
மாவட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி வரவேற்புரையாற்ற, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன் தொடக்க உரை யாற்றினார்.
முன்னதாக ந.நாத்திகனின் ‘மந்திரமா? தந் திரமா?’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மு.சண்முகப்ரியன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே.சிவா ஆகியோர் விளக்க வுரையாற்றினர்.

சுயமரியாதை என்றால் என்ன?
சிறப்புரையாற்றிய திராவிடர் கழக மாநில பரப்புரை செயலாளர் வழக்குரைஞர் அ.அருள் மொழி, சுயமரியாதை என்றால் என்ன? என்ற கேள்வியை கேட்டுவிட்டு, சுயமரியாதை என் றால் என்ன என்பதை கதைகள் மூலம் விளக்கி கூறினார்.
பார்ப்பனர்கள், நமக்கு கல்வி வராது என்று கூறி, நம்மையே நம்ப வைத்து, நம்மை பள்ளிக்கூடம்‌ சென்று படிக்க முடியாமல் செய்து விட்டனர். குழந்தைத் திருமணத்தை பார்ப்பனர்கள் நடத்தி வைத்து பெண்களை விதவைகளாக ஆக்கி வைத்த கொடுமை நடந்து வந்தது; ஒரு வயது குழந்தைகள் கூட விதவைகள் ஆக்கப்பட்டனர். இந்தக் கொடு மையை எதிர்த்துப் போராடிய சாரதா என்ப வரின் பெயரில் ‘சாரதா சட்டம்’ என்று குழந்தைகள் (பால்ய விவாகம்) திருமணத்தைத் தடை செய்யும் சட்டம் வெள்ளையர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.

வெள்ளையரின் ஆட்சி நடைபெற்ற போது இந்தியர்களுக்கும் வேலை கொடுக்க வேண் டும் என கோரிக்கை வைத்தனர் காங்கிரஸ் காரர்கள். அதை ஏற்றுக்கொண்டது அன்றைய வெள்ளையர் அரசு. ஆனால், பார்ப்பனர்களே வேலை வாய்ப்பைப் பெற்று வந்தனர். இதை எதிர்த்து தான் தன்னை பெரியார் காங்கிரஸ் மாநாடுகளில் இட ஒதுக்கீடு கோரிக்கைகளை முன்வைத்தார். இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து தள்ளுபடி செய்ததால் காங்கிரசை விட்டு தந்தை பெரியார் வெளியேறி சுயமரி யாதை இயக்கத்தை தோற்றுவித்தார்.
அதனால்தான் நமக்கு கல்வியும், வேலை வாய்ப்பும் கிடைத்தது. இன்றைய நிலையில் காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, இட ஒதுக்கீட்டை தேர்தல் அறிக்கையிலேயே வெளியிட்டு பரப்பி வருகிறது.

1957 ஆம் ஆண்டு ஜாதியை ஒழிக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தினார் தந்தை பெரியார். இதன் விளைவாக இன்று தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தனது பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதி பட்டத்தை தூக்கி எறிந்து விட்டனர். ஜாதிப் பெயரை சொல்வதையே அவமானமாக கருதுகின்றனர்.
தந்தை பெரியாரின் கொள்கை வழி திட்டமே இந்தியாவிற்கு தேவையானது என்று அனைவரும் உணர்ந்துள்ளனர் என்றும், சுய மரியாதை திருமண முறைப்படி நடத்தப்பட்ட திருமணங்களைப் பற்றியும் விளக்கி கூறினார். பொட்டுக்கட்டி பெண்களை விபச்சாரிகளாக கடவுளின் பெயரால் ஆக்கி வைத்ததை எதிர்த்து சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து மூவாலூர் இராமாமிர்தம் அம்மையார் அவர்கள் போராடினார். டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் முயற்சியால் ‘தேவதாசி முறை ஒழிப்பு’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இத னால் பெண்கள் சுயமரியாதை உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது. சுயமரியாத இயக்கம், படி, படி என்று கூறி வந் ததால் அனைத்து துறைகளிலும் சாதனை களைப் படைத்து வருகிறார்கள் தமிழர்கள். ‘தனக்கு வழிகாட்டியாக தந்தை பெரியார் அமைந்ததால் தான் விண்வெளித் துறையில் என்னால் சாதிக்க முடிந்தது’ என அறிவிய லாளர் மயில்சாமி அண்ணாதுரை கூறியதை சுட்டிக்காட்டினார்.

சுயமரியாதை இயக்கத்தின் வேர்களை மறக்கக்கூடாது என்பதற்காகத்தான் இது போன்ற சுயமரியாதை நூற்றாண்டு விழாக்கள் நாடு முழுக்க நடைபெற்று வருகிறது என கூறி சிறப்புரையை முடித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களை 2024 ஆம் ஆண்டுக்கான ‘பெரியார் ஒளி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை பாராட்டும் முகமாக மாவட்ட கழகத்தின் சார்பாகவும் இளைஞர் அணியின் சார்பாகவும் மகளிர் அணியின் சார்பாகவும் பகுதி கழகத் தின் சார்பாகவும் மற்றும் விடுதலை சிறுத் தைகள், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய வற்றின் சார்பாகவும் வழக்குரைஞர் அ.அருள் மொழிக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தென் சென்னை மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.மாரியப்பன், தென் சென்னை மாவட்ட மகளிரணி தலைவர் வி.வளர்மதி, செயலாளர் பி.அஜந்தா, மகளிர் பாசறை தலை வர் மு.பவானி, சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் மு.பசும்பொன், இளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, மயிலை ஈ.குமார், மா.சண்முகலட்சுமி, ஜெ.சொப்பனசுந்தரி, வி.வித்யா, மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் வி. தங்கமணி, வி.யாழ்ஒளி, எம்.ஜி.ஆர்.நகர் கரு.அண்ணாமலை, ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச் செல்வன், சீ.மணி, டி. ராஜா, செல்வம், ஆர். கிருஷ்ணன், வி. அகிலாண்டேஸ்வரி, எஸ். ரம்யா, ரவி, அ. ஷேக் அப்துல்லா, ராஜேஷ், மு. லோகநாதன், அ. பன்னீர்செல்வம், எஸ். மணி, இரா.அருள், அய்ஸ் அவுஸ் உதய சூரியன், மா.இன்பக்கதிர் மற்றும் பலர் கலந்து கொண்டு செவிமடுத்தனர்.
மந்தைவெளி பன்னீர் நன்றியுரை ஆற் றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *