மார்த்தாண்டம் மே 7- பொன் ராதாகிருஷ்ணன் ஒன்றிய அமைச்சராக இருந்த போது போது தனது நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலம் சீர்படுத்தப் பட்டது. இது கட்டப் பட்டு திறந்த சில நாட் களிலேயே ஆட்டம் காணத்துவங்கியது. இதனால் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல் லும் நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக 14.11.2018 அன்று நாளிதழ் ஒன்றில் பொன் ராதாகிருஷ்ணன் மார்த்தாண்டம் மேம் பாலம் நவீன தொழில் நுட்பத்துடன் அமைக் கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் 9ஆவது தூண் அதிர்வதாக சிலர் சமூக வலை தளங்களில் பொய்யான தகவலை பரப்புகின்றனர். பாலம் இடிந்து விழப் போகிறது என்றும் பீதியை கிளப்பி வருகின்றனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். தொடர்ந்து வதந்திகள் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பாலம் நான்கு தலைமுறைகளுக்கு மேல் மக்கள் பயன்படும் விதத் தில் அமைக்கப்பட்டுள் ளது என்று கூறியிருந் தார்.
இந்த நிலையில் மார்த்தாண்டம் இரும்பு மேம்பாலத்தில் கான் கிரீட் உடைந்து விழுந்து பள்ளம் ஏற்பட்டது நான்கு தலைமுறைக்கு பெயர் சொல்லும் என்று கூறி பொன் ராதாகிருஷ் ணனால் திறந்துவைக்கப் பட்ட அப்பாலம் ஒரு தலைமுறையே காண்ப தற்குள் கான்கிரீட் பெயர்ந்து விழுந்துள்ளது வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சமடைய செய்துள்ளது.