ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
சென்னை, மே 7– பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமனின் 90ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 9.2.2025 அன்று முழுநாள் தமிழ்ப் பெருவிழாவாகக் கொண்டாடப் பட உள்ளது. இது தொடர் பாக ஆலோசிக்க செயல் வீரர் கள் கூட்டம் மே 4 அன்று சென்னையில் நடைபெற்றது.
பெருங்கவிக்கோ பிறந்த ஊரில் ஒரு கல்லூரி நிறுவ நிதி திரட்டினால், அமெரிக்கா வாழ் முத்துமாரி கவிஅரசன் தனது மாரிவில் பகுதியில் தனது இரண்டு காணி (மூன்று ஏக்கர்) நிலத்தை கல்லூரி தொடங்க நன்கொடையாகத் தர இசைந்துள்ளார்.
பெருங்கவிக்கோ தொடங்கி வளர்த்த நிறுவனங்களை ஓர் அறக்கட்டளைக் குடையின் கீழ் இணைத்து, தமிழ்ப் பணிகள் தொடரும் வகையில் வழிவகை கண்டறியவும், 90 அகவை முதல் பெருங்கவிக்கோ பெயரில் கல்லூரி, தமிழ்க் கோட்டம், சாலை என அவர் பணி பாடும் செயல் களை எப்படிச் செயல்படுத்துவது என்று ஆலோசிக்கும் கூட்டத்தில் கருப்பசாமி வரவேற்புரை ஆற்றினார்.
தமிழ்ப்பணிக் கழகத் தலைவர் வா.மு.சே.கவி அரசன் பெருங்கவிக்கோ கல்லூரி அமைக்க இதுவரை நடந்துள்ள பணிகளை விவரித்தார். கல்லூரி நன்கொடை திரட்ட “உலகக் கவியின் உன்னதப் பணிக்கு உங்கள் பங்கு”என்ற அயலகத் தமிழருக்கான திட்டத்தையும். பெருங்கவிக் கோவிற்கு பெருமை சேர்க்க உங்கள் பங்கு ஒரு உருபாய் என்ற இந்தியத் தமிழர்களுக்கான திட்டத்தையும் எடுத்து ரைத்தார் பாவாணர் கோட்ட நிறுவனர் நெடுஞ்சேரலாதன் பைந்தமிழ் இயக்க நிறுவனர் தமிழாளன் திட்டத்தை செயல் படுத்தும் வழியை விவரித்தனர். மறத்தமிழன் தொலை இணையில் (ஸிமீனீஷீtமீ) இணைந்தவர்களை ஒருங்கிணைக்க, கவிஞர் இரவி பாரதி, வா.மு.சே. திருவள்ளுவர், தமிழ் இயலன், கணபதி, கண்மதியன், சிந்தைவாசன், நந்தன், தன. தமிழரசன் மற்றும் பலர் பெருங்கவிக்கோ 90 ஆலோ சனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு 2025 கல்வி ஆண் டில் கல்லூரி தொடங்கும் பணிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.