சென்னை, மே 7- கல்விச்சான்றிதழ்களை பாதுகாக்க மாணவர்களுக்கு கைகொடுக்கிறது தமிழ்நாடு அரசின் இ-பெட்டகம் செயலி. இனி எங்கும், எப்போதும் அதனை பதிவிறக்கம் செய்யலாம்.
கடந்த காலங்களின் அரசின் சேவைகள் எல்லாம் காகித மய மாக இருந்தன. அரசிடம் இருந்து ஒரு சான்றிதழை பெற்றுவிட்டு, அது தொலைந்து விட்டால் மீண் டும் அதனை பெறுவது என்பது குதிரைக் கொம்பான விஷயம். அதேபோல் அந்தச் சான்றிதழை நாம் பாதுகாப்பாக வைத்திருப்ப தும் மிகவும் சிரமமான விஷயமாக இருந்தது.
ஆனால் இப்போது டிஜிட்டல் உலகில் அரசின் அனைத்து சேவை களும் டிஜிட்டல் முறையிலேயே நடக்கிறது. ஒன்றிய அரசு தான் வழங்கும் அனைத்து சான்றிதழ் களையும் மக்கள் 24 மணி நேரமும் எடுத்து கொள்ளும் விதமாக ‘டிஜிலாக்கர்’ செயலியை அறிமுகம் செய்து உள்ளது. அதன் மூலம் ஆதார் கார்டு, பான்கார்டு, ஓட்டு னர் உரிமம் உள்பட 1,703 துறைகள் மற்றும் சேவை சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியை இதுவரை 27 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். மொத்தம் 673 கோடி சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஒன்றிய அரசின் ‘டிஜிலாக்கரை’ போல, தமிழ்நாடு அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு ‘இ-பெட்டகம்’ என்ற செயலியை அறிமுகம் செய் தது. அதாவது தமிழ்நாடு அரசு தரும் அத்தனை சேவைகளும் அதில் இணைக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் தற்போதைய நிலையில் சுமார் 30 சான்றிதழ்கள் மட்டுமே அதில் பதிவிறக்கம் செய் யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பயன் அளிக் கும் விதமாக கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் பத்தாம் வகுப்பு சான்றிதழ் கள், செவிலியர் பட்டய படிப்பு சான் றிதழ், டிப்ளமோ பார்மசி படிப்பு ஆகியவற்றை பாதுகாத்து வைத்து கொள்ளலாம். அதேபோல் வரு வாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஜாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், வாரி சுச் சான்றிதழ், இதர பிற்படுத்தப் பட்டோர் சான்றிதழ் உள்பட 27 சான்றிதழை சேமித்து வைக்க முடி யும். இந்த இ-பெட்டகம் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது https://www.epettagam.tn.gov.in இணையதளம் மூலமும் பயன்படுத்தலாம். அதில் முதலில் நமது ஆதார் எண் கொடுக்க வேண்டும்.
உடனே நமது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். அதில் வரும் எண்ணை பதிவிட்டால் இ-பெட் டகத்தை பயன்படுத்த தொடங்கி விடலாம்.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 10ஆம் தேதி வருகிறது. சான்றிதழ் களை மாணவர்களுக்கு அரசு கொடுக்கும் பணியை தொடங்கும் போதே இ-பெட்டகத்திலும் இதனை நாம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே மாணவர் கள் இ-பெட்டகத்தை பதிவிறக்கம் செய்து தங்களது சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பெட்டகத்தில் சேமித்து வைக்கப்படும் இந்த சான்றிதழ் களை மீண்டும் எத்தனை ஆண்டு கள் கழித்து வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அதே வேளையில் ஏற்கனவே படித்து முடித்த மாணவர்களும் இ-பெட் டகத்தில் மூலம் 2016ஆம் ஆண்டு முதலான சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். மேலும் ஏற்கனவே பெற்ற வருவாய்த்துறைச் சான்றிதழையும் நமது ஆதார் எண் கொடுத்து மீண்டும் பெற லாம். எனவே இனி சான்றிதழ்கள் தொலைந்து போய் விட்டது என்ற கவலை இல்லாமல் உலகம் முழு வதும் எங்கிருந்தாலும் அதனை இ–பெட்டகம் மூலம் எளிதாக பெறலாம்.