பிளஸ் டூ தேர்வு – மாவட்ட வாரியாக முடிவுகள்

2 Min Read

சென்னை, மே 7– தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (6.5.2024) காலை வெளியிடப்பட்டது.
அதன்படி, மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டு 94.03% விகிதம் தேர்ச்சி பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் சற்றே உயர்ந்துள்ளது.

பிளஸ் 2 முடிவுகளின் முக்கிய அம்சங்கள்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாணவிகள் 96.44%, மாணவர்கள் 92.37% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம். பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதிய மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 5,603. தேர்ச்சி அடைந்தோர் எண்ணிக்கை 5,161. (92.11%)
தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி அடைந்தோர் எண்ணிக்கை 115 (92%)
இந்தத் தேர்வில் 397 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:
அரசுப் பள்ளிகள் – 91.02%
அரசு உதவி பெறும் பள்ளிகள் – 95.49%
தனியார் சுயநிதிப் பள்ளிகள் – 98.70%
மகளிர் பள்ளிகள்- 96.39%
ஆண்கள் பள்ளிகள் – 88.98%
இருபாலர் பள்ளிகள் – 94.78%
பாடப்பிரிவுகள் வாரியாக தேர்ச்சி விகிதம்
அறிவியல் பாடப்பிரிவுகள் – 96.35%
வணிகவியல் பாடப்பிரிவுகள் – 92.46%
கலைப் பிரிவுகள் – 85.67%
தொழிற்பாடப் பிரிவுகள் – 85.85%
முக்கிய பாடங்களில் தேர்ச்சி
இயற்பியல் – 98.48%
வேதியியல் – 99.14%
உயிரியல் – 99.35%
தாவரவியல் – 98.86%
விலங்கியல்- 99.04%
கணினி அறிவியல் – 99.80%
வணிகவியல் – 97.77%

நூற்றுக்கு நூறு பெற்றவர்கள்!
தமிழ் – 35
ஆங்கிலம் – 07
இயற்பியல் – 633
வேதியியல் – 471
உயிரியல் – 652
கணிதம் – 2,587
தாவிரவியல் – 90
விலங்கியல் – 382
கணினி அறிவியல் – 6,996
வணிகவியல் – 6142
கணக்குப் பதிவியல் – 1,647
பொருளியல் – 3,299
கணினிப் பயன்பாடுகள் – 2,251
வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் – 210

மாவட்ட வாரியாக +2 பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம்:
திருப்பூர் – 97.54
ஈரோடு- 97.42
சிவகங்கை – 97.42
அரியலூர் – 97.25
கோவை – 96.97
விருதுநகர் – 96.64
பெரம்பலூர் – 96.44
திருநெல்வேலி – 96.44
தூத்துக்குடி – 96.39
நாமக்கல் – 96.10
தென்காசி – 96.07
கரூர் – 95.90
திருச்சி – 95.74
கன்னியாகுமரி – 95.72
திண்டுக்கல் – 95.40
மதுரை – 95.19
ராமநாதபுரம் – 94.89
செங்கல்பட்டு – 94.71
தேனி – 94.65
சேலம் -94.60
சென்னை – 94.48
ஊட்டி – 94.27
கடலூர் – 94.36
புதுக்கோட்டை – 93.79
தருமபுரி – 93.55
தஞ்சாவூர்- 93.46
விழுப்புரம்- 93.17

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *