7.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக 150 இடங்களை தாண்டாது, ராகுல் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஆச்சரியம், ஆச்சரியம்! குஜராத்தில் 7 தொகுதிகளில் பாஜக கடும் போட்டியை சந்தித்து வருகிறது. சுரேந்திரநகர், சபர்கந்தா, பனஸ்கந்தா, ராஜ்கோட், ஆனந்த், படான், ஜுனாகத் ஆகிய ஏழு மக்களவைத் தொகுதிகளில் கடும் போட்டி நிலவுவதாக கூறுகிறார் பத்திரிகையாளர் திலிப் சிங் சத்திரியா.
* இந்தியாவின் தனித்துவமான ‘நீட்’ (Not in Education, Employment, or Training) சவால், அதாவது, கல்வி, வேலைவாய்ப்பு, பயிற்சி மற்றும் அதை எதிர்கொள்வது புதிய அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்கிறார் சுனிதா நட்டி.
* 12ஆம் வகுப்பு தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் 94.56 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்
தி இந்து:
* ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்தை ரூ.400 ஆக காங்கிரஸ் உயர்த்தும் என்று மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி பேச்சு.
தி டெலிகிராப்:
* மேற்குவங்க ஆளுநர் ஆனந்த போஸ் மீது பாலியல் குற்றம் சாட்டிய ராஜ்பவன் இளம் பெண் ஊழியர், தன்னை தனி அறையில் அடைத்து வைத்து, அலைபேசி மற்றும் பையைப் பறித்ததாகவும் மூன்று ராஜ்பவன் ஊழி யர்கள் மீது புகார் செய்வதிலிருந்து தடுக்க முயன்றதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
* இடஒதுக்கீடு ஒழித்திட பாஜக செய்து வரும் சதியை மக்கள் பார்த்து, பாஜகவை தோற்கடிக்க முடிவு செய்துள்ளனர். ஜூன் 4 ஆம் தேதி பதவியேற்கும் புதிய அரசாங்கத்தில் மோடி தனது “10 ஆண்டுகால தவறான ஆட்சிக்கு” பொறுப்பேற்க வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியா சிறீநிதி பேட்டி.
* இந்தியாவையும் அரசமைப்பையும் காப்பாற்ற பாஜகவுக்கு எதிராக புல்டோசர் போல வாக்களிக்க வேண்டும் என்கிறார்கள் உத்தரப்பிரதேச வாக்காளர்கள்.
– குடந்தை கருணா
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
Leave a Comment