பெரம்பலூர், மே 7- பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழ கம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு கலந்துரை யாடல் மற்றும் தீர்மான கூட்டம் மருத்துவர் குண கோமதி மருத்துவமனை இல்லத்தில் மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையில் மாவட்ட ப.க தலைவர் பெ.நட ராசன், நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம் முன்னி லையில் 6.5.2024 அன்று மாலை 5.30 மணிக்கு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில தொழிலாளர் அணிச்செயலாளர் மு.சேகர் விடுதலையின் செயல்பாடு, ஆசிரியர் அவர்களின் ஆயுள் நீட் டிப்பிற்கு விடுதலை சந் தாவின் தேவையை விளக் கிப்பேசினார்.
சந்தா விவரங்கள்
பெ.நடராசன் ப.க தலைவர் 10 சந்தா, சர்புதீன் அமைப்பாளர் வ.களத்தூர் 5 சந்தா, ஆறுமுகம் நகர தலைவர் 5 சந்தா, சின்னசாமி 5 சந்தா, மு.ராமு 5 சந்தா, அரங்க ராசன் 5 சந்தா, சீத்தாபதி 5 சந்தா, வேலாயுதம் 5 சந்தா, மு.விசயேந்திரன் 5 சந்தா என மொத்தம் 50 சந்தாவினை 20.5.2024 க்குள் திரட்டித் தர உறுதி ஏற்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டதை அனை வரும் முகமலர்ச்சியோடு ஏற்றுக் கொண்டனர்.