கரூர் மாவட்ட கழகம் சார்பில் 50 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கரூர், மே 7- கரூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வேலாயுதம் பாளையம் இடதுசாரி கள் கட்சி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி யில் கரூர் மாவட்ட தலைவர் ப. குமாரசாமி தலைமையில் நடைபெற் றன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரை யும் கரூர் மாவட்ட செய லாளர் ம. காளிமுத்து வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் மாநில அமைப்பாளர் திண்டுக் கல் வீரபாண்டி முன் னிலை வகித்தார்.

மாநில தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி மு சேகர் கரூர் மாவட்ட திராவிட கழகத்தின் சார் பில் அதிக அளவில் விடு தலை சந்தாக்களை திரட்டி தருமாறு சிறப்புரை நிகழ்த் தினார். நிகழ்ச்சியில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன.
கரூர் மாவட்ட கழகத் தின் சார்பில் 50 விடுதலை சந்தாக்களை 20-5-2024¢ தேதி யில் பொதுமக்களிடம் பெற்று தலைமைக் கழகத் திடம் ஒப்படைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் விருப்பத்தினை நிறை வேற்றும் பொருட்டு 50 விடுதலை சந்தாக்கள் திரட்டி கொடுப்போம் என ப.குமாரசாமி, காப் பாளர் வே.ராஜு, மாவட் டச் செயலாளர் காளி முத்து, பொதுக்குழு உறுப் பினர் கட்டளை உ,வைர வன், கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் இரா. பெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ் ஆகியோர் ஆறு புத்தகங்களை பெற் றுக்கொண்டு விடுதலை சந்தாக்களை திரட்டி கொடுப்போம் என உறுதி அளித்தனர். உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட் டத் தலைவர் குமாரசாமி, மாவட்ட செயலாளர் காளிமுத்து, காப்பாளர் வே. ராஜு, கரூர் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய தலைவர் இரா பெருமாள், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ், இளைஞர ணித் தோழர்கள் கார்த்தி, விக்னேஷ், வேலாயுதம்பா ளையம் மோகன், அண்ணா நகர் இளமாறன் ஆகி யோர் கலந்து கொண்ட னர் நிகழ்ச்சியின் நிறை வாக வேலாயுதம் பாளை யம் மோகன் நன்றி உரை யாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *