தமிழவேள் உமாமகேசுவரனார் (உமாமகேசுவரம் பிள்ளை) (மே 7, 1883 – மே 9, 1941) தமிழறிஞர். தமிழ்க்கல்வி, தமிழ் கலைச்சொல் லாக்கம், தமிழாய்வு ஆகியவற்றுக் காக முன்னோடியான அமைப்பு களை உருவாக்கியவர். தஞ்சை யில் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்து தலைவராக இருந் தவர். வழக்குரைஞர், தஞ்சைக்கு பல பொதுப்பணிகள் ஆற்றியவர்.
கரந்தை தமிழ்ச்சங்கம்
தமிழ் கற்பிக்கவும், நூல்களை வெளியிடவும், ஆராய வும் சங்கம் ஒன்று தேவை என உணர்ந்த உமாமகேசுவர னார் கரந்தையில் நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் தலைமையில் மே 14, 1911ஆம் நாள் கூடிய மாநாட்டில் ‘கரந்தைத் தமிழ்ச் சங்கம்’ என்னும் அமைப்பை உருவாக்கினார். அத்தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைமைப் பொறுப்பை உமாமகேசுவரனார் ஏற்றார். இணையான உள்ளம் கொண்டவர்களைச் சேர்த்து மே 14, 1911இல் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை தொடங்கினார். அதன் தலைவராக இருந்து அவ்வமைப்பை ஒரு தமிழி யக்கமாகவே ஆக்கினார். ஆயிரக்கணக்கான நூல்களைப் பெற்று விளங்கும் கரந்தைத் தமிழ்ச் சங்க நூல் நிலையம் அவர் முயற்சியால் ஏற்படுத்தப்பட்டது.
உமாமகேசுவரனார் நீதிக்கட்சி ஆதரவாளர். தமிழ்நாட்டுப் பள்ளிகளில் 1938ஆம் ஆண்டு ஹிந்தி மொழி கட்டாய பாடமாக்கப்பட்டபோது அதனை முழு மூச்சாக எதிர்த்தார்.
பள்ளிகளில், தமிழாசிரியர்கள் தலைமையாசிரியர் களாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்தார். காந்தியார் தஞ்சாவூரில் உக்கடை ஹவுசில் 16.9.1927இல் தங்கியிருந்தபோது நீதிக்கட்சி சார்பில் உமாமகேசுவரனார் ஏ.டி. பன்னீர்செல்வம், உக் கடைத் தேவர், சையத் தாஜுதீன், கார்குடி சின்னையா பிள்ளை, பட்டுக்கோட்டை தண்டபாணி செட்டியார் ஆகி யோருடன் சென்று சந்தித்து பிராமணர் – பிராமணரல்லாதார் பூசலில் தலைவர்கள் தலையிட்டு புரிதலை உருவாக்க வேண்டும், மத ஒற்றுமை மற்றும் சாதிவேற்றுமை களைதலில் காங்கிரஸ் மேலும் தீவிரமாக ஈடுபடவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
1935ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண அரசு ராவ் பகதூர் விருது வழங்கியது.
வட இந்தியப் பயணத்தின் போது உடல்நிலை குன்றிய தால், அயோத்தியின் அருகே உள்ள ஒரு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். மே 9, 1941 இல் மறைந்தார்.
வாழ்க தமிழவேள் உமாமகேசுவரனார்!!