இம்பால், மே 6 மணிப்பூரில் ஓராண்டாக நடந்த வன்முறையை கண்டித்து, அங்குள்ள பெண்கள் மொட்டைய டித்து, கருப்பு உடை யணிந்து சைக்கிள் பேரணி நடத்தினர்.
மணிப்பூரில் இரு சமூ கத்தினருக்கு இடையே கடந்த ஓராண்டாக வகுப்புவாத கலவரம் நடைபெற்று வருகிறது. இரு சமூகத்தினருக்கு இடையிலான வன்முறை யில் இதுவரை 230 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கா னோர் காயமடைந்துள் ளனர். இரு சமூகங் களை யும் சேர்ந்த 70,000க்கும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். மேலும் பல வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இந்நிலையில் இம் பாலின் மய்யப்பகுதியில் உள்ள செக்மாய் கிரா மத்தை சேர்ந்த பெண்கள் சிலர், கடந்த ஓராண்டாக நடந்து வரும் வன் முறைக்கு எதிராக கருப்பு உடை அணிந்து கொண்டு செக்மாயில் இருந்து காங்லா வரை 19 கி.மீ தூரத்திற்கு சைக் கிளில் பேரணியாக சென் றனர். மேலும் அவர்களில் சிலர் மொட்டையடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில்,
‘மணிப்பூர் மாநில பிரச்சினைகளை கையாள்வதில், மாநில அரசு தோற்றுவிட்டது. உரிய தீர்வின் மூலமாக மாநிலத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீட்டெடுக்க வேண்டும். மக்களிடையே ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சைக்கிள் பேரணி மற்றும் மொட்டையடிக்கும் போராட்டத்தை நடத்தினோம்’ என்றனர்.
மோடியின் கண்ணா மூச்சி: மணிப்பூர் கலவரம் நடந்து ஓராண்டாகியும், பிரதமர் மோடி அங்கு எட்டிக் கூட பார்க்க வில்லை. இவ்விசயத்தில் பிரதமர் மோடியை எதிர் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. கடந்த ஓராண்டில் மட் டும் மணிப்பூரைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு பிரதமர் மோடி 162 பய ணங்களை மேற்கொண் டார். அதேபோல் 14 முறை வெளிநாடு சென்று வந்தார். அதாவது கடந்தாண்டு மே 3ஆம் தேதிக்கு பின்னர் நடந்த வன்முறை நிகழ்வுகளில் 230 பேர் பலியாகினர். 60,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாக்கப்பட் டன. இவ்விசயத்தில் மணிப்பூர் முதலமைச்சர் பை£ன் சிங் அல்லது மற்ற அமைச்சர்கள் மீது கூட எவ்வித நடவடிக் கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டு ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்ராவும் மணிப்பூரில் இருந்து தொடங்கியது. ஆனால் மோடி மணிப் பூர் செல்லாதது தற் போதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.