அய்தராபாத்,மே 6– அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித் வெமுலா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் கிடையாது என்று கூறி காவல்துறையினர் விசாரணையை முடித்துள்ளனர்.
மாணவருக்கு ஆதரவாக போராட்டம்
கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி அய்தராபாத் பல்கலைக் கழக வளாகத்தில் தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் ரோஹித் வெமுலா ஜாதிக் கொடுமை காரணமாக தற் கொலை செய்து கொண்டார். இத் தற்கொலைக்கு பா.ஜ.க-வின் மாண வர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களும், பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் தத்தாத்ரேயா, சட்டமேலவை உறுப் பினர் ராம்சந்தர் மற்றும் பல்கலைக் கழக துணைவேந்தர் போன்றோர் காரணம் என்று அப்போது குற்றம் சாட்டப்பட்டு போராட்டங்களும் வெடித்தது.
இத்தற்கொலையை தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. பா.ஜ.க ஒன்றிய அமைச்சர் தத்தாத் ரேயா சொல்லி, அப்போதைய கல்வி அமைச்சர் ஸ்மிரிதி இரானி தாழ்த் தப்பட்ட சமூக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததாக தாழ்த்தப் பட்ட சமூக அமைப்புகள் குற்றம் சாட்டின. காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சந்தித்து பேசினார். இதையடுத்து தனது அரசு, தாழ்த்தப்பட்ட சமூகத் திற்கு எதிரானது கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்தார். கடந்த எட்டு ஆண்டுக ளாக இவ்வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென காவல் துறையினர் இவ்வழக்கு விசார ணையை முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அறிக்கை அதிர்ச்சி கொடுப் பதாக இருக்கிறது. மாணவர் ரோஹித் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர் கிடையாது என்று அந்த அறிக் கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறியிருப்பதாவது:
“படிப்புக்காக ரோஹித் தாயார் தனது மகனுக்கு போலி தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சான்றிதழ் வாங்கி இருக்கிறார். தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் கிடையாது என்பது ரோஹித்துக்கும் தெரியும். இந்த உண்மை எப்போது வெளியில் வருமோ என்ற ஒரு வித பயத்தில் ரோஹித் தொடர்ந்து வசித்து வந்த தாகவும், உண்மை வெளியில் வந் தால் தனது படிப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வந்தார். அந்த மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண் டார். 2018ஆம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை அடிப்பையில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது” என காவல்துறையினர் தங்களது விசா ரணை அறிக்கையில் குறிப்பிட்டுள் ளனர்.
கடந்த 21ஆம் தேதியே காவல் துறையினர் விசாரணை அறிக் கையை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் ஒரு வாரம் கடந்த பிறகு தான் இது குறித்த செய்தி வெளியில் வந்துள்ளது. அதுவும் தெலங்கானா மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகி இருக்கி றது. இந்த அறிக்கை குறித்து ரோஹித் குடும்பம் சந்தேகம் கிளப்பி இருப்பதால் மேற்கொண்டு இது குறித்து விசாரிக்கப்படும் என்று மாநில காவல்துறை இயக்குநர் ரவி குப்தா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “2018ஆம் ஆண்டு நடத் தப்பட்ட விசாரணை அறிக்கை அடிப்படையில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படுள்ளது.
விசாரணயில் குற்றவாளிகள் ரோஹித்தை தற்கொலைக்கு தூண் டிதற்கான எந்த வித ஆதாரமும் கிடைக்கவில்லை. ஆனால் ரோஹித் தாயாரும், உறவினர்களும் சில சந் தேகங்களை எழுப்பி இருப்பதால் அது பற்றி மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் நீதிமன்றத்தில் இது குறித்து மேலும் விசாரிக்க அனுமதி கேட் டுள்ளனர்”என்றார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந் தவர்கள் மீதான துன்புறுத்தலைத் தடுக்க ரோஹித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும் என காங் கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருப்பது குறிப் பிடத்தக்கது.
காவல்துறையினர் மாணவரின் தற்கொலை மற்றும் அவர் துன் புறுத்தப்பட்டது குறித்து விசாரிக் காமல் ஜாதி குறித்து காவல்துறையினர் விசாரிப்பதாக ரோஹித் குடும்பம் குற்றம் சாட்டி இருக் கிறது.
தற்கொலை நடந்தபோது சந் திரசேகர் ராவ் முதலமைச்சராக இருந்தார். எனினும் இப்போது தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது குறிப்பிடத்தக்கது.