1901ஆம் ஆண்டு ஏப்ரல் 18-இல் சாகு பார்ப் பனரல்லாதாருக்கு என ஒரு மாணவர் விடுதியை நிறுவினார். அதில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகையும் கொடுக்கப் பட்டது. சாகுவின் காலத்தில் இதைப்போல் 300 விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன.
ஏழாம் எட்வர்டு மன்னரின் முடிசூட்டு விழா விற்காக, சாகு 1902ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் நாள் இலண்டன் போய்ச் சேர்ந்தார். அங்கிருந்த போதுதான் சாகு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பில் 50% இடங்களை ஒதுக்கி உத்தரவிட்டார். 1902-ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் நாள் அவருடைய அரசின் சிறப்பிதழில்(State Gazeti of july26 1902) இவ்வுத்தரவு வெளியிடப்பட்டது.
அவ்வுத்தரவின் அடிப்படையில் பிற்படுத் தப்பட்டவர்கள் 50%க்கு ஒருவர் குறைவாக இருந்தால்கூட, அடுத்தமுறை தேர்வு செய்யும் போது அந்த இடத்தையும் பிற்படுத்தப்பட்ட வரைக் கொண்டு நிரப்ப வேண்டும்; அதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெளிவு படுத்தினார் சாகு மகாராசா. பிற்படுத்தப் பட்டவர்கள் யார் என்பதைப் பின் கண்டவாறு தெளிவுப்படுத்தினார். (பார்ப்பனர் கள், பிரபுக்கள், பார்சிகள் தவிர்த்த மற்றவர்கள்)
சாகு பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கு 50% இட ஒதுக்கீடு கொடுத்த உடனேயே, அதை மிகவும் வன் மையாகக் கண்டித்தவர், திலகர். தகுதி, திறமை என்ற வார்த்தைகளை திலகர் – அப்போதே பயன்படுத் தினார். ‘கேசரி’ ஏட்டில் சாகு வின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை வன்மையாகக் கண்டித்து எழு தினார். இலண்டன் சென்று திரும்பி வந்த சாகுவின் வரவேற்பு விழாக் கூட்டத்திற்கு ஒரு பார்ப்பனர் கூட வரவில்லை .கோல்காப்பூர் ஆளுகைக்குட்பட்ட சங்கேவர் என்ற இடத்தில் சங்கரமடம் ஒன்று இருந்தது. அதில் சங்கராச் சாரியாக இருந்த வித்யா சங்கர் பாரதி என்ற பார்ப்பனன், சங்கர மடத்திலுள்ள விலையுயர்ந்த, பொன், வெள்ளி, பட்டு போன்ற பொருட்களையும், சங்கர மடத்திற்குச் சொந்த மான நிலங்களையும் விற்று, அந்தப் பணத்தை யெல்லாம் தன் னுடைய பிள்ளைகளுக்கும் சகோதரர்களுக்கும் கொடுத்து வந்தார். இது சாகுவிற்குத் தெரிய வந்தது. எனவே சாகு 1903-ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் சங்கர மடத்தின் சொத்துக் களை அரசுடைமையாக்கினார்.1903 ஆம் ஆண்டு மே மாதத்தில் சங்கராச்சாரியின் பதவியைப் பிடுங்கி, சங்கராச் சாரிக்கு இருந்த மத அதிகாரத்தை யும் அறவே நீக்கி அவரை ஒரு சாதாரண மனிதராக்கினார்.
சாகுவால் பதவி நீக்கம் செய் யப்பட்ட சங்கராச்சாரி மகாராட்டிரம் முழுவதும் சுற்றித் தனக்கு ஆதரவு திரட்டிக் கொண்டிருந்தான். அவன் பூனா சென் றிருந்தபோது, பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த அந்த சங்கராச்சாரியின் பல்லக்கை திலகர் தானே சுமந்து சென்று அவ னுக்கு ஆதரவு திரட்டினார். பதவி நீக்கம் செய்யப்பட்ட சங்கராச்சாரி எங்கெங்கோ சுற்றி அலைந்து ஆதரவு திரட்டியும் பலன் இல்லாமல் இரண்டரை ஆண்டுகள் கழித்து வந்து சாகுவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.
சாகுவின் வம்சமான போஸ்லே சத்திரிய வமிசம் என்றும், சாகுவிற்கு வேதமந்திரம் ஓதப் பட வேண்டும் என்றும் அறிவித்தான். இனி நான் தவறு செய்ய மாட்டேன் என்று உறுதிமொழியும் கொடுத்தான்.எனவே சாகு 1905 ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி சங்கர மடத்தின் சொத் துக்களை மீண்டும் அந்தப் பழைய சங்கராச்சாரி வித்யா சங்கர் பாரதி என்பவனிடம் ஒப்படைத் தார். சாகுவால் பதவி நீக்கம் செய்யப்பட்ட அரண்மனைப் புரோகிதப் பார்ப்பான் ராஜாபடே என்பவன் தன்னுடைய பதவி நீக்கம் செல்லாது என பம்பாய் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தான். அவ்வழக்கிலும் சாகுவிற்குச் சாதகமாகவே தீர்ப்பு கிட்டியது. எனவே அரண் மனைப் புரோகிதன் இந்திய அரசுக்கு மேல் முறையீட்டு மனுச் செய்தான். 1905 ஆம் ஆண்டு மே மாதம் அவனுடைய மேல் முறையீட்டு மனு கர்சன் பிரபுவால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அதன்பிறகும் 10 ஆண்டுகள் சுற்றி அலைந்து அந்தப் பார்ப்பான் தனக்கு ஆதரவு திரட்ட முயன்று தோல்வியுற்று, 1916 சூலை மாதம் சாகுவிடம் வந்து தான் செய்த தவறுக்கு மன்னிப் புக் கேட்டுக் கொண்டான். அவனை ஊதியத் திற்கு சாகு மீண்டும் பணி யில் அமர்த்தினார்.