சிங்கப்பூரின் (மறைந்த) பிரபல வணிகர் வி.நமசிவாயம் அவர்களது மகனும், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்
கல்லூரி மேனாள் முதல்வர் எஸ்.ராஜசேகரன் அவர்களது மைத்துனரும் அனுசுயா ராஜசேகரன் அவர்களது
சகோதரருமான திரு.கோபிநாதன் அவர்கள் (வயது 70) உடல்நலக் குறைவால் நேற்று (4.5.2024) சிங்கப்பூரில் காலமானார்.
இன்று (5.5.2024) பகல் 12.45 மணிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவரது வாழ்விணையர் திருமதி மோகனா,
கவிதா மாறன் ஆகியோர் சிங்கப்பூர் கின்மின் டிரைவ் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு இறுதி மரியாதை
செலுத்தினர். திருமதி தேவகி, மகன்கள் புவனேசுவரன், விக்னேசுவரன், சகோதரர் வழக்குரைஞர் வாசன், திருமதி
தைலம்மாள் நமசிவாயம் ஆகியோருக்கு ஆறுதல் கூறி – இரங்கல் தெரிவித்துத் திரும்பினர்.
சிங்கப்பூர் கோபிநாதன் மறைவு குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல்
Leave a Comment