சியாச்சின் அருகே சீனா அமைக்கும் சாலை பணிகள் இந்தியா கண்காணிக்கிறதா

1 Min Read

உலகம்

புதுடில்லி, மே 5- சியாச்சின் பனிமலைக்கு வடக்கே சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் 5180 சதுர கி.மீ இந்திய பகுதியை பாகிஸ்தான் கடந்த 1963ஆம் ஆண்டு சீனாவுக்கு சட்ட விரோதமாக வழங்கியது.
தற்போது இந்த சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்கும் பணியை சீனா மேற்கொள்கிறது. இந்த சாலையை சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கின் மேல் பகுதிவரை சீனா நீட்டித்தால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
சீனா அமைக்கும் புதிய சாலை 16,333 அடி உயர்த்தில் உள்ள சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் அகில் கணவாய் வழியாக செல்கிறது. இதன் மூலம் காரகோரம் கணவாய் பகுதிக்கும் இணைப்பை ஏற்படுத்த முடியும். இந்த இணைப்பு ஏற்படுத்தப்பட்டால், இங்கிருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள குஜேராப் கணவாய் பகுதிக்கும் சாலை அமைக்க முடியும்.
இவ்வாறு மேல் சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கு வரை சாலையை சீனா விரிவுபடுத்தினால், சியாச்சினில் உள்ள இந்திய ராணுவத்தினர் தென் பகுதியில் பாகிஸ்தானிட மிருந்தும், வடபகுதியில் சீனாவிடமிருந்தும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடும். ஆக்கிரமிப்பு சாக்ஸ்கேம் பள்ளத் தாக்கில் சாலை அமைக்கும் திட்டத்தை சீனா விரிவுபடுத் தினால், சியாச்சின் பனிமலைப் பகுதியில் நீண்ட கால பாதுகாப்பு திட்டங்களில் இந்திய ராணுவம் கவனம் செலுத்த நேரிடும்.
சியாச்சின் பனிமலைப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாமுக்கு அழுத்தம் கொடுக்கவே சாக்ஸ்கேம் பள்ளத்தாக்கில் சாலை அமைக்க சீனா விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் சிறப்பு பிரதிநிதி பேச்சுவார்த்தை குழுவில் இப்பிரச் சினையை இந்தியா எழுப்பியுள்ளது. எல்லையை பாது காக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்பதையும், சட்டவிரோத ஆக்கிரமிப்பு பகுதியில் சாலை அமைக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த தேவையான நடவடிக்கையை மேற்கொள்வோம் என சீனாவிடம் இந்தியா தெளிவு படுத்தியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *