காரைக்குடி, மே 5- நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப் படும் என அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எடப்பாடி பழனிசாமி தலை மையில் செயல்பட்ட அதிமுக அரசு தவணை முறையில் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தினர். இதில் 55 சதவீதம் பெற்று அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுக வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலை மையிலான அரசு நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கான ஊரகப்பகுதிகளுக்கான தேர்தல், நகராட்சி, பேரூராட்சி, மாநக ராட்சி தேர்தலை நடத்தி ஜனநாய கத்தை நிலைநாட்டியது.
அதுபோல தற்போது கூட்டு றவு சங்கங்களுக்கான பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. சிறப்பு அலு வலர்கள் மூலம் அந்த பணிகள் நடந்தது வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு கள் வந்தபிறகு முறையாக தேர்தல் பணிகள் செய்ய கூட்டுறவுத்துறை தயாராக உள்ளது. வாக்காளர் பட்டியல் சரி பார்க்க வேண்டும், உறுப்பினர் சேர்க்கைக்கு வாய்ப்பு தர வேண்டும் என அனைத்தும் பணிகளும் முடிந்து தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.