விருதுநகர், மே 5- விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக பொறுப்பாளர்கள் கூட்டம் அருப்புக் கோட்டை பெரியார் படிப் பகத்தில் நடைபெற்றது.
மாவட்ட திராவி டர் கழகத்தலைவர் கா.நல்ல தம்பி தலைமை வகித்தார். பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத்தலைவர் ந.ஆனந்தம் முன்னிலை வகித்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்.
கழகப்பேச்சாளர் இராம.அன்பழகன், மாவட்ட கழக செயலா ளர் விடுதலை தி.ஆதவன், மாவட்டஅமைப்பாளர் வெ.முரளி, மாவட்ட ப.க. செயலாளர் பூ.பத்மநா தன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் இரா.அழ கர், அருப்புக்கோட்டை நகரசெயலாளர் பா.இராசேந்திரன், சண் முகநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கியது டன், ஒவ்வொருவரும் அய்ந்து சந்தாக்கள் திரட் டித்தர உறுதி கூறி சந்தா புத்தகங்களை பெற்றனர்.
விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 50 சந்தாக்கள் வழங்க முடிவு!
Leave a Comment