தஞ்சாவூர், செப். 11- தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் உயிரிழந்தார். குழந்தையையும் அவர் கொன்றுவிட்டதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை சுண்ணாம்புக்காரத் தெரு ஆற்றங்கரைப் பகுதியை சேர்ந்தவர் வசந்தி(வயது38). இவ ருடைய கணவர் செந்தில்(45). கட்டடத் தொழிலாளி. இவர் களுக்கு ஏற்கெனவே 3 பெண் குழந் தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில்,
6ஆவதாக வசந்தி கர்ப்பமானார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு பிரசவ நாள் நெருங்கியது. வசந் திக்கு பிரசவ வலி அதிகமானது.
அப்போது அவர் மருத்துவ மனைக்கு செல்லாமல் தனக்கு தானே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அப்போது வசந்திக்கு 6-ஆவதாக ஆண் குழந்தை பிறந்தது.
ஏற்கெனவே தனக்கு 5 குழந் தைகள் உள்ள நிலையில், 6ஆவதாக பிறந்த குழந்தையை வளர்க்க பொருளாதார வசதி இல்லாததால் புதிதாக பிறந்த குழந்தையை கொலை செய்ய வசந்தி முடிவு செய்தார். இதன்படி அவர் குழந்தையின் கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்தார்.
பின்னர் அவர் குழந்தையின் உடலை ஒரு பெயிண்ட் வாளியில் வைத்து மூடி வைத்தார். இந்த நேரத்தில் வசந்திக்கு திடீரென அதிக அளவு ரத்தப்போக்கு ஏற் பட்டு அவர் மயங்கி விழுந்தார். இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக் கோட்டை அரசு மருத்துவ மனைக் குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்தி பரிதாப மாக இறந்தார்.
இந்த நிலையில் வசந்தியின் குடும்பத்தினர் அவரது உடலை மருத்துவமனையில் இருந்த யாருக் கும் தெரியாமல் எடுத்து சென்று விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் காவல் துறையினர் வசந்தியின் வீட்டுக்கு விரைந்து சென்று வசந்தி மற்றும் அவரது குழந்தையின் உடலை கைப்பற்றி உடற் கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வசந்தியின் கணவர் செந்திலை அழைத்துச் சென்று காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.