காரைக்குடி, மே 4- காரைக் குடியில் நடைபெற்ற சுய மரியாதை இயக்கம் மற் றும் குடிஅரசு நூற்றாண்டு விளக்க தெருமுனைக் கூட் டம் 3.5.2024 வெள்ளி மாலை ராஜீவ்காந்தி சிலை அருகே மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை தலைமையில் நடைபெற் றது.
கூட்டத்தில் தலை மைக் கழக அமைப்பாளர் கா.மா.சிகாமணி, மாவட்டக் காப்பாளர் சாமி திராவிடமணி, மாவட்டத் துணைத் தலைவர் கொ.மணிவண் ணன், மாவட்டத் துணைச் செயலாளர் இ. ப.பழனி வேல் முன்னிலையில் நடைபெற்றது. மாவட் டச் செயலாளர் சி.செல்வ மணி வரவேற்புரை ஆற் றினார்.
கழகப் பேச்சாளர் தி. என்னாரெசு பிராட்லா தொடக்க உரையைத் தொடர்ந்து கழக சொற் பொழிவாளர் மாங்காடு சுப.மணியரசன் சிறப்பு ரையாற்றினார்.
மாவட்ட ப.க தலை வர் சு.முழுமதி, மாவட்ட ப.க.அமைப்பாளர் செல்வம் முடியரசன், கல்லல் ஒன்றியச் செயலா ளர் வீ. பாலு, நகர கழக அமைப்பாளர் ஆ.பால்கி, தேவகோட்டை நகரத் தலைவர் வீ. முருகப்பன், தேவகோட்டை நகர செயலாளர் ந.பாரதி தாசன், தேவகோட்டை ஒன்றிய செயலாளர் அ. ஜோசப், தேவகோட்டை ப.க. அமைப்பாளர் சிவ தில்லை ராசா ஆகியோர் பங்கேற்றனர்.
நகரத் தலைவர் ந.ஜெக தீசன் நன்றி கூறினார்.