பிரியங்கா காந்தி கேள்வி
லக்னோ, மே 4- தனக்காக விமானம் வாங்கிய மோடி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை என பிரியங்கா குற்றம்சாட்டினார்.
பிரியங்கா காந்தி வாகன பேரணி
உத்தரப்பிரதேசத்தின் பதே பூர் சிக்ரி மக்களவை தொகு தியில் சுரங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராம்நாத் சிகார் வாரை ஆதரித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று
(3-5-2024) அங்கு பிரச்சாரம் செய்தார்.
அவர் திறந்த வாகனத்தில் பேரணி யாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது சாலையின் இருபுறமும் ஏரா ளமான மக்கள் திரண்டு நின்று பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பேரணியின்போது பிரியங்கா காந்தி மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்களை தவறாக வழிநடத்திய தேசத்தின் மிகப்பெரிய தலைவரை நீங் கள் பார்த்திருக்கிறீர்கள். அவர் தேர்தல் நேரத்தில் உங்கள் உணர்ச்சிகளை தூண்டி உங்கள் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அவர் உங்களுக்கு எதுவும் கொடுக்கவில்லை. அவர் தனது பணக் கார நண்பர்களுக்கு மட்டுமே கொடுத் துள்ளார்.
விவசாயிகளின் கண்ணீரை துடைத்தாரா?
பிரதமர் தனக்காக விமானம் வாங்கி னார். ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. மோடி ஒரு விவசாயியின் கண்ணீரை துடைத்தாரா? அல்லது ஒரு ஏழைக்கு உதவி செய்தாரா? அவர் தனது பணக்கார நண்பர்களுக்காக மட்டுமே தனது அரசாங்கத்தை நடத்து கிறார். மோடி உலகத்தைப் பார்ப்பதில் மும்முரமாக இருக்கிறார். ஆனால், அவர் ஒருபோதும் உங்களை நெருங்கி உங்கள் பிரச்சினையை புரிந்துகொள்வதில்லை. அதிகாரம் பெற்றவனுக்கு அடிக்கடி திமிர் வரும். 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மோடி திமிர் பிடித்தவர் ஆகிவிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்த நாட்டின் ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழி லாளர்களுக்கு அதிக அநீதி இழைக்கப் பட்டுள்ளது.
-இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.