நீக்குவார்களா…?
மகன்: ஸனாதன ஒழிப்பு என்பது ஒரு நாடகம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே, அப்பா!
அப்பா: ஸனாதனத்தை எதிர்த்த அண்ணாவின் பெயரை கட்சியிலிருந்து நீக்குவார்களா, மகனே!
ஜாதி உயர்வு – தாழ்வு!
மகன்: எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது என்று பி.ஜே.பி. பிரமுகர் ஜெயராம் தாகூர் சொல்லியிருக்கிறாரே, அப்பா!
அப்பா: எந்தக் காலத்திற்கும் ஜாதி உயர்வு தாழ்வு என்பதை நிலை நிறுத்தப் போகிறார்களோ, மகனே!