பாணன்
மோடி கடைசியாக தனது கட்சி யினருக்காகச் சுட்ட வடைதான் ‘இம்முறை 400அய்த் தாண்டி” என்ற டுபாக்கூர் வரட்டுக் கத்தல்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரியில் தனது கட்சி விசுவாசிகளிடையே உரையாற்றிய நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சிக்கு 370 மக்களவை தொகுதிகளை இலக்காக நிர்ணயித்தார். பாஜகவுக்கு 330 முதல் 390 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறுவதாக அவர்களிடம் தெரிவித்தார். அதுமட்டுமல்ல மக்களிடையே இது தொடர்பாக நாம் பேசுவோம் என்றார். அன்றைய அவரது முழக்கம் ‘சார் சோ பார்’ ஆதாவது 400அய்த் தாண்டி என்பதாகும்.
தமிழ்நாட்டில் அவரது பக்த கோடிகளே! தியாகராய நகரில் அவரது பிளாப் ரோட் ஷோவில் மோடியின் “சார் சோ பாரை”, “சாக்கோபார்” என்று முடித்துவிட்டார்கள்.
“சாக்கோ பார்” என்பது உறைய வைக் கப்பட்ட அய்ஸ்கிரீம் மீது சாக்லேட் திரவத்தை ஊற்றி அதை குச்சி அய்ஸ் வடிவில் கொடுப்பது. உண்மையில் மோடியும் இதைத்தான் செய்தார். பொய்களை நம்பவைத்து அதனை மூடி மறைக்க ஹிந்து, ராமன், முஸ்லீம், அவுரங் கசீப் எனக்கலவையை ஊற்றி தான் செய்த ஊழலை மறைப்பதுதான் இந்த “சாக்கோ பார்” – மன்னிக்கவும் “சார் சோ பார்”.
துவக்குவதும் நாம் தாம் முடிப்பதும் நாம் தான் என்பதுபோல் இந்த “சாக்கோபார்” என்று தமிழ்நாட்டில் மோடியின் ரோடு ஷோவில் கூச்சல் போட்டது நாடு முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்த அதற்கு பிறகு அவர் இம்முறை 400 க்கு மேல் என்ற முழக்கத்தை எங்குமே பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்றி மற்றும் மாநிலங்களவையில் சமமான வெற்றி என்பது பாஜகவை அரசமைப்பில் அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள அனுமதிக்கும் என்பதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிலைப்பாடாக இருந்தது.
இத்தகைய உறுதியான பெரும் பான்மையானது, இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் மற்றும் 2047-க்குள் வளர்ந்த பொருளாதாரமாக மாற்றும் முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை தனது அரசாங்கம் மேற்கொள்ள உதவும் என்று கூறும் பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசமைப்பை நீர்த்துப்போகும் திட்டத்தினை – மறைத்து பேசிவருகிறார்.
பிரதமர்களான பி.வி. நரசிம்மராவ் மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் போன்றோருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றபோதும் குறிப்பிடத்தக்க பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு பொருளாதாரத்தை முன்னேற்றினர்.
நாட்டின் வளர்ச்சியையும் ஆதாயங் களையும் பாதுகாக்க பிரதமர் மன்மோகன் சிங் தனது அரசின் போது பலமான தூண்களை வைத்தார்.
மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை இருந்தும் விவசாயத் துறை சட்டங்களை சீர்திருத்த மோடி தவறிவிட்டார். சீர்திருத்தத்திற்கு புத்திசாலித்தனமான தலைமை தேவை, எண்கள் மட்டுமல்ல. எவ்வாறாயினும், மோடி இவ்வளவு பெரும் பான்மையைப் பெறுவதை அவரது சொந்தக் கட்சியினர் உள்பட பலர் விரும்பாததற்கு மிகவும் மாறுபட்ட அரசியல் காரணம் உள்ளது.
நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் நாற்காலியில் அமர்வதை நிச்சயமாக ராஜ்நாத் சிங்-கோ, நிதின் கட்கரியோ அவரது உடலின் பாதி என்று கட்சியினரால் கூறப்படும் அமித் ஷா கூட விரும்பவில்லை.
இரண்டாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த மோடி தங்களை அரசியல் ரீதியாக சுருக்கி, இழிவுபடுத்தி, ஒதுக்கியதைக் கண்டறிந்த பிறகு, எந்த முக்கிய பாஜக தலைவர்கள்தான், சுதந்திரமான அரசியல் அடித்தளத்துடன், மோடிக்கு 370 வேண்டும் என்று நினைப்பார்கள்? நிச்சயமாக ராஜ்நாத் சிங் – கோ, நிதின் கட்கரியோ இல்லை, ஏன் அமித் ஷா கூட நினைக்கமாட்டார்.
சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜவடேகர், ரவிசங்கர் பிரசாத், சுரேஷ் பிரபு போன்ற வாஜ்பாயின் அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் ஒவ்வொருவராக மோடியால் விடுவிக்கப்பட்டதை பாஜக தலைவர்கள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இன்றும் பதவியில் இருக்கும் பலருக்கும் அந்த நிலை வரலாம். தங்கள் தலைவர்கள் தங்க ளைச் சார்ந்திருக்க வேண்டும் என்று அரசியல்வாதிகள் நினைப்பது அரசியலில் எழுதப்படாத விதி.
பாஜகவின் எந்த மூத்த உறுப்பினரும் தனது கட்சிக்கு அடிமையாக இருப்பதை விரும்புவதில்லை. மோடியின் 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு, பல இளம் தலைவர்கள் மோடிக்குப் பிறகு தங்கள் எதிர்காலத்தை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்கிறார்கள்.
ராஜ்நாத் மற்றும் அமித் ஷா போன்றோர் ஓய்வு பெறலாம், ஆனால் இளைய வர்களின் நிலை என்ன?
ஏற்கெனவே ராகுல்காந்தி யின் இரண்டு நடைபயணங்களால் மோடியின் மதிப்பு ஒட்டுமொத்தமாக சரிந்துவிட்டது. இதனை மறைக்க முன்னணி ஊடகங்கள் படாத பாடுபட்டுக்கொண்டு இருக்கின்றன.
தனது கட்சி அமைப்புகளையும், படிநிலைகளையும் பலவீனப்படுத்தி, அதிகாரத்தை மய்யப்படுத்துவதே மோடியின் நுணுக்கமான செயலாகும் – ராஜஸ்தானின் மூத்த பாஜக தலைவர் வசுந்தரா ராஜே, மத்தியப் பிரதேசத்தில் 4 முறை முதலமைச்சாராக இருந்த சிவராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கரில் பிரபல பாஜக முகமான ரமன் சிங் போன்றோரை முகவரி இல்லாமல் மாற்றி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மற்றும் சத்தீஸ்கரில் எந்த ஒரு மக்கள் ஆதரவுமே இல்லாத நபர்களை முதலமைச்சர்களாக வைத்தபோதே அந்த அந்த மாநிலங்களில் கட்சி பலவீனப்பட்டுப்போனது. இது தேர்தல் பரப்புரையிலேயே தெளிவாக தெரியவந்தது.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் – இந்த அமைப்பு மோடியை ஆர்வத்துடன் ஆதரித்தது, இதற்கு பரிகாரமாக மோடி ஆர்எஸ்எஸ்சின் சில கொள்கைகளை செயல்படுத்தியுள்ளார். இருப்பினும், 2019 தேர்தலுக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்-க்கும் மோடிக்கும் இடையிலான அதிகார பலம் மோடிக்கு சாதகமாக சாய்ந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தயவு பாஜக அரசுக்கு எப்போதும் தேவை என்ற நிலையை விட்டுவிடாது.
பாஜக கூட்டணியின் ஒரே ஒரு முக்கிய தலைவராக உள்ள சந்திரபாபு நாயுடு வேறு வழியில்லாமல் தான் கடைசி நேரத்தில் பாஜகவில் இணைந்தார். இதை எதிர்பார்த்தே தந்திரமான ஆந்திர ஒய்.எஸ்.ஆர். குடும்பம் காய்களை நகர்த்தியது.
சகோதரியை காங்கிரஸ் பக்கம் திருப்பிவிட அவர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகி தன்னுடைய அரசியல் பலத்தை உறுதி செய்தார். இதன் மூலம் 10 ஆண்டுகால ஜெகன்மோகன் ஆட்சிக்கு எதிரான மக்களின் வாக்குகள் தனக்கு வரும் என்று நினைத்த பாஜக மற்றும் சந்திரபாபு நாயுடுவின் கனவில் மண் அள்ளிப்போட்டுவிட்டார். ஒய்.எஸ்.சர்மிளாவுக்கு இப்போது காங்கிரஸ் வாக்கு – மாநில ஆட்சிக்கு எதிரான வாக்கு மற்றும் பாஜகவிற்கும் ஜெகன் மோகன் ரெட்டிக்கும் வாக்களிக்காமல் யாருக்கு வாக்களிப்போம் என்று இருந்த மக்களுக்கு முக்கியமாக இளைய தலைமுறையினருக்கு ஒய்.எஸ்.சர்மிளாவின் வருகை ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆகையால் பாஜக ஆந்திராவில் கூட்டணி அமைத்தும் ஒன்றுமில்லாத நிலை உருவாகிவிட்டது.
அதே போல் நவீன் பட்நாயக் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று வெளியே கூறினாலும் மக்கள் அவரை பாஜகவின் கூட்டணிக் கட்சியாகத்தான் பார்க்கிறார்கள். ஆகவே அங்கும் பாஜக மற்றும் நவீன் பட்நாயக் இருவருமே பின்னடைவைச் சந்திக்கின்றனர். பாஜக மற்றும் பாஜக அல்லாத எந்தவொரு முதலமைச்சரும் தங்கள் தேவைகளுக்குப் பதிலளிக்கும் பிரதமரையே விரும்புவார்கள். ஆனால் இங்கே மோடியோ அவருக்கு கைப்பாவையாக இருக்கவேண்டும் என்று முதலமைச்சர்களை நிர்பந்திக்கிறார்.
அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லாத பிரதமரைக் காட்டிலும், அவர்களுக்கு அதிக மரியாதையும், அவர்கள் சொல்வதைக் கேட்கத் தயாராகவும் இருக்கக்கூடிய, பிரதமரையே மாநில முதலமைச்சர்கள் விரும்புவார்கள். அரசியல் என்பது அதி காரத்தைப் பற்றியது. சுருங்கச் சொன்னால், மக்கள் செல்வாக்கு மிகுந்த எந்தவொரு அரசியல்வாதியும், அது பாஜ கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அல்லது வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், சர்வாதிகாரத்துடன் ஆதிக்கவாதியாகவும் திகழும் மோடிக்கு ஆதரவு அளிக்க விரும்ப மாட்டார்கள்.
தவிர, எந்தவொரு நாட்டிலும் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான முதலீட்டாளர்கள் ஒரு சில முதலாளிகளுக்கு மட்டுமே சூட்கேஸ் தூக்கும் பிரதமரை விரும்பமாட்டார்கள். தேர்தல் பத்திரத்தின் மூலம் பல முதலாளிகளை அரசின் விசா ரணை அமைப்புகளைக் கொண்டு மிரட்டி பணம் பெற்றது பல தொழில் வல்லுநர் களுக்கு மிகவும் கசப்பான அனுபவம் ஆகும். தேர்தல் பத்திரங்கள் மற்றும் பிற வழிகள் மூலம் பாஜகவால் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் நுட்பமான மற்றும் வெளிப்படையான வற்புறுத்தலின் மூலம் பெறப்பட்டது என்பது இப்போது அனைவருக்கும் தெரியும்.
பாஜகவிற்கு ஆதரவான வணிகத் தலைவர்களே அனைத்து அதிகாரமும் சர்வாதிகாரமும் கொண்ட மோடியை விரும்பவில்லை. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலதிபர்கள் மெதுவாக ஆனால் தனித்தனியாக வெளியேறுகின்றனர். பலர் என்ஆர்அய் தகுதியைப் பெற்றுள்ளனர்.
இந்தியாவில் தனியார் கார்ப்பரேட் முதலீடு தொடர்ந்து தேக்க நிலையில் இருக் கும் அதே வேளையில், இந்தியாவிலிருந்து உலகெங்கிலும் உள்ள இலக்குகளுக்கான