ரூபாய் 2500 கோடி செலவழித்து என்ன பயன்?

Viduthalai
3 Min Read

 ஜி-20 மாநாடு நடந்த மண்டபத்தில் மழை நீர் தேக்கம் அம்பலப்படுத்தியது காங்கிரஸ்

அரசியல்

புதுடில்லி, செப்.11 ஜி_20 மாநாடு நடைபெறும் அரங்கிற்குள் மழை நீர் புகுந்த காட்சிப் பதிவை காங்கிரசு வெளியிட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனோசியா தலைநகர் பாலியில் ஜி_20 நாடுகளின் 17ஆவது உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்சு அதிபர் இம் மானுவேல் மேக்ரான், இந்திய பிர தமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். 

அந்த கூட்டத்தில் இந்தியாவுக்கு ஜி-_20 நாடுகள் குழுவின் தலைமைப் பதவி வழங்கப்பட்டது. இந்த குழுவில் உள்ள நாடுகளுக்கு ஆண்டுதோறும் தலைமைப் பதவி வழங்கப்படும். தலைமைப் பதவி ஏற்கும் நாட்டில் அந்த ஆண்டு ஜி_20 மாநாடு நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு (2023) ஜி_20 மாநாடு டில்லியில் நடை பெற்றது.  ஒன்றிய அரசு இதற்காக அனைத்து வகை ஏற்பாடுகளையும் பல மாதங்களாக செய்து வந்தது. இந்தியாவில் இதற்காக பல மாநிலங்களில் ஜி_20 ஆலோசனைக் கூட்டங்களும் நடைபெற்றன.

அனைத்து ஏற்பாடுகளும் முடிந் ததை அடுத்து ஜி_20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு டில்லியில்  தொடங்கி நேற்று (10.9.2023) முடிவடைந்தது.அமெ ரிக்கா, இந்தியா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, துருக்கி, ஜப்பான், பிரான்சு, ஜெர் மனி, தென் கொரியா, இத்தாலி, இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில், துருக்கி, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.  

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெர்மனி பிரதமர் ஏன்செலா மெர்கல், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வங்கதேச பிரத மர் சேக் ஹசீனா அய்நா தலைவர் ஆண்டோனியோ குட்டரஸ், உலக வங்கி, பன்னாட்டு நிதியம் உள் ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். 

இந்த மாநாட்டின் முதல் நாளில் உலகத் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்து அளித்தார். அதில், இந்தி யாவின் மேனாள் பிரதமர்கள், அனைத்து மாநிலங்களின் முதல மைச்சர்கள், அரசியல் கட்சி(த்) தலைவர்கள், வெளிநாட்டு தூது வர்கள், தொழில் அதிபர்கள் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் டில்லியில் கொட்டிய மழை காரணமாக ஜி_20 மாநாடு நடைபெற்ற அரங்கில் மழை நீர் தேங்கிய காட்சிப் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதை ட்விட்டரில் பதி விட்டு உள்ள, திரிணாமூல் காங் கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் சகெத் கோகலே, “பத்திரிக்கை யாளரின் இந்த காணொலியின்படி, ஜி_20 உச்சி மாநாட்டின் இடம்  மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள் ளது. 4000 கோடி செலவழித்த பிற கும் உள்கட் டமைப்பின்  நிலை இது தான். இந்த 4000 கோடி ஜி_20 நிதி யில் மோடி அரசு எவ்வளவு ஊழல் செய்தது?” என்று கேட்டுள்ளார். 

காங்கிரசு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, “2700 கோடி ரூபாய் செலவில் உருவாக் கப்பட்ட பாரத மண்டபம் ஒரே இரவில் பெய்த மழையால் பல் இளிக்கின்றது. முறையான வடிகால் அமைப்பு கூட இல்லை.

தற்போது இயந்திரங்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. டில்லியில் ஏழை எளிய மக்கள் வாழ்ந்து வருகின்ற குடிசைப் பகுதிகளை பச்சை நிற பதாகைகள் மூலம் மறைத்த மோடி அரசு இதனை சரியாக வடிவமைக்கத் தவறியது தேச அவமானம். மழை ஒரு தேச விரோதி என்று தற்போது சங்கீகள் புலம்பப் போகின்றார்கள்” என்று குறிப் பிட்டு உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *