தூத்துக்குடி, மே 3- 2.5.2024 அன்று தூத் துக்குடியில் மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் மாவட்டத்தலைவர் மு.முனியசாமி தலைமையில், காப்பாளர்கள் மா.பால்இராசேந்திரம், சு.காசி, ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் கோ.முருகன் வரவேற்புரையாற்றினார்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் நோக்கவுரையாற்றினார் அய்ந்து சந்தாக்களை சேர்த்து தருகிறோம் எனக்கூறி ஒவ்வொருவரும் சந்தா புத்தகங்களை பெற்றுக் கொண்டார்கள்.
மாவட்ட திராவிடர் கழகம் 100 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
கழகப்பேச்சாளர் இராம.அன் பழகன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஆழ்வார், மாநகர தலைவர் செல்லத்துரை, மாவட்ட ப.க.செயலாளர் மதிவாணன், முத்தையாபுரம் பகுதி தலைவர் செல்வராசு, விளாத்திகுளம் ஒன்றி யத்தலைவர் பாலமுருகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செ.நவீன் ஆகியோர் கருத்துரை யாற்றினார். மாவட்ட இளைஞ ரணி தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.