பெங்களூரு, மே 3- நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதி களவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல் தெரிய வந்துள்ளது.
சந்திரயான் 3 அனுப்பிய தகவல்களை ஆராய்ச்சி செய்ததில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறு இருப்பது உறு தியாகியுள்ளது. இஸ்ரோவின் ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டர் பிரிவு, அய்அய்டி கான்பூர், அய்அய்டி தான் பாத், கலிபோர்னியா பல் கலைக்கழகம், ஜெட் ப்ராபல் ஷன் ஆய்வகம் இணைந்து நடத்திய ஆய்வில், நிலவின் தென்துருவப் பகுதிகளை விட வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பிலி ருந்து ஒரு சில அடி ஆழத் தில் இருக்கும் பனிக்கட்டிகள், துருவப் பகுதிகளில் இருக் கும் பனிகட்டிகளை விட 5 – 8 மடங்கு பெரியளவில் உள்ளதாகவும், ஆகவே, தென் துருவப் பகுதி மேற் பரப்பை ஆழ்துளையிட்டு அவற்றை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சந்திரயான் 4 திட்டத்தில் தென் துருவத்தில் தரைப் பகுதியை துளை யிட்டு ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நிலவின் வட துருவப் பகுதி களில், தென் துருவப் பகுதி களில் இருப்பதை விட இரு மடங்கு அதிகளவிலான நீர், பனிக்கட்டிகளாக உறைந்த நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.