தூத்துக்குடி, மே 3- 2.5.2024 அன்று மாலை தூத்துக் குடி சிதம்பரனார் நகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு குடிஅரசு நூற்றாண்டு விழா மாவட்ட கழக தலைவர் முனியசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட திராவிடர் கழக செயலாளர் கோ முருகன், மாநகர திரா விட கழக தலைவர் பெரியார் தாசன், மாநகர பகுத்தறிவாளர்கள் தலை வர் மதிவாணன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
தமிழர் விடியல் கட்சி சோம.சந்தனராசு, புரட்சிகர இளைஞர் முன்னனி சி.சுஜித், திமுக இலக்கிய அணி மாவட் டப் பொறுப்பாளர் மோ. அன்பழகன், கழக காப் பாளர்கள் மா.பால்இரா சேந்திரன், சு.காசி, திரா விடர் கழக மாநில ஒருங் கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் ஆகியோர் உரையாற்றி னார்கள்.
கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், அறிவாசான் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி யதற்கு முன்பு அடிமை நிலையில் இருந்த நிலை யையும், இன்று சுயமரி யாதையோடு கல்வியில், வேலைவாய்ப்பில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உயர்ந் தோங்கி வாழ்ந்திடும் சிறப்பினை விளக்கி சிறப்புரையாற்றினார்.
இறுதியில் மாவட்ட கழக துணைத் தலைவர் இரா.ஆழ்வார் நன்றி கூறினார்.
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – குடிஅரசு நூற்றாண்டு விழா கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் சிறப்புரை
Leave a Comment