80,000 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி!
சென்னை, மே 3- தமிழ்நாடு முழுவதும் 23 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 23 ஆயிரம் அரசு தொடக்கப்பள்ளிகளில் ஸ்மார்ட் போர்டுகள் நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வரும் கல்வி ஆண்டுக்குள் தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க பள்ளிக்கல்வித் துறை திட்ட மிட்டுள்ளது. வரும் ஜூன் மாதத் துக்குள்50 சதவீத பணிகள் நிறை வடையும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வரை 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஸ்மார்ட்வகுப்பறைகள் அமைக்கப்பட் டுள்ளன. மேலும், அரசு தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.
இதுதவிர 8 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு அகண்ட அலைவரிசை இணையதள இணைப்புகள் வழங்கவும் பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.