சென்னை, மே 3- ஓட்டுப் பதிவு முடிந்து ஒட்டுகள் பாதுகாப்பாக உள்ளன. இதற்கிடையில் நோட் டுக்களை எண்ண வேண் டிய கட்டாயத்தில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளி யாகியுள்ள தகவலில் உள்ள விவரம் வருமாறு,
தமிழ்நாட்டில் பா.ஜ.க. போட்டியிட்ட தொகு திகள் ஏ,பி,சி என்று 3 பிரி வாக பிரிக்கப்பட்டிருந்தன.
இதில் ‘ஏ’ பிரிவில் தென் சென்னை, மத்திய சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல் வேலி, விருதுநகர், மதுரை ஆகிய தொகுதிகள் இடம்பெற்று இருந்தன.
வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக கண்டறி யப்பட்ட இந்த தொகுதிக்கு தாராளமாக செலவுக்கு கட்சி சார்பில் பணம் கொடுக்கப்பட்டது.
பெரும்பாலும் வேட் பாளர்கள் கைகளில் ஒப் படைக்கப்பட்ட பணங் களை அவர்கள் பொறுப் பாளர்களிடம் கொடுத்து பூத் வரை செலவு செய்ய வேண்டும் என்பது விதி.
இதனால் மேலிட தலைவர்கள் கடும் அதிர்ச் சியில் இருக்கிறார்கள். இதையடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் மய்யக்குழு கூட்டத்தை கூட்டி வரவு, செலவு கணக்குகளை கேட்டு அறிக்கை தயா ரித்து மேலிடத்துக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தென் சென்னையில் மய்யக் குழு கூட்டம் நடத்தி கணக்கு கேட்கப் பட்டுள்ளது. மத்திய சென்னை, திருவள்ளூர் தொகுதிகளில் இன்னும் கூட்டம் கூட்டவில்லை. காணாமல் போன கோடிகளை தேடும் பட லம் பா.ஜ.க. வுக்குள் பர பரப்பாக பேசப்படுகிறது.