சென்னை, மே 3- தமிழ் நாட்டில் 12ஆ-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத் தப்பட்ட பிளஸ் 2 பொதுத் தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித் தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். விடைத் தாள் திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் உள்ள 75 மய்யங்களில் நடை பெற்றது.
இந்நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்ட மிட்டபடி வருகின்ற
6-ஆம் தேதி வெளியிட தயார் நிலையில் உள்ள தாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பிளஸ்-2 முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இப் போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள் ளது.
ஆனால் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. எனவே தேர்வுத்துறை அதிகாரிகள் பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடுவார்கள் என தெரி கிறது.